வீட்டில் மாம்பழம் நிறைய இருந்தால் இப்படி ஃபுரூட்டி செய்து பாருங்க

Published : May 13, 2025, 06:03 PM IST
homemade frooti

சுருக்கம்

கோடை காலத்தில் மாம்பழம் ஈஸியாக கிடைக்கும். நிறைய மாம்பழம் வாங்கினால் வீணாகி விடும் என நினைக்க வேண்டும். அவற்றை வீணாக்காமல், சுவையான மற்றும் ஆரோக்கியமான ஃப்ரூட்டியை வீட்டிலேயே செய்து வெயிலுக்கு இதமாக ஜில்லென குடிக்கலாம். 

ஃப்ரூட்டியை வீட்டில் தயாரிக்கும்போது, நல்ல தரமான புதிய மாம்பழங்களில் இருந்து தயாரிப்பதால், இதன் சுவை மிகவும் இயற்கையாக இருக்கும். மேலும், செயற்கை நிறமிகள், சுவையூட்டிகள் மற்றும் அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து உங்களுக்கு எந்த அளவு இனிப்பு அல்லது புளிப்பு தேவையோ, அதற்கு ஏற்ப பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம். கடைகளில் கிடைக்கும் ஃப்ரூட்டியில் இது சாத்தியமில்லை. ஒரே மாதிரியான ஃப்ரூட்டியை தயாரிக்காமல், புதினா, இஞ்சி போன்ற பொருட்களை சேர்த்தும் புதிய சுவைகளை உருவாக்கலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கொடுக்கும்போது, சர்க்கரையின் அளவை குறைத்துக்கொள்ளலாம்.

வீட்டில் ஃப்ரூட்டி தயாரிக்க தேவையான பொருட்கள்:

பழுத்த மாம்பழங்கள் - 4-5

சர்க்கரை - 3-4 தேக்கரண்டி

தண்ணீர் - 1-2 கப்

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை

ஃப்ரூட்டி தயாரிக்கும் முறை:

மாம்பழங்களை நன்றாக கழுவி, பின்னர் அதன் தோலை நீக்கி மாம்பழத்தின் சதை பகுதியை மட்டும் வெட்டி எடுக்கவும். வெட்டிய மாம்பழ துண்டுகளை ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் போட்டு, முதலில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைக்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் மிருதுவாக கூழ் போல் அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த மாம்பழ கூழை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றவும். அதனுடன் சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். சர்க்கரை முழுமையாக கரையும் வரை கலக்க வேண்டும். சர்க்கரை கரைந்தவுடன், ஃப்ரூட்டியின் இனிப்பை சரிபார்த்து, தேவைப்பட்டால் சர்க்கரை சேர்க்கலாம்.

இப்போது காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை சேர்த்து நன்றாக கலக்கவும். ஃப்ரூட்டியின் தடிமன் உங்களுக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவிற்கு தண்ணீரை சேர்த்து சரிசெய்து கொள்ளவும். ரொம்பவும் நீர்க்கமாகவோ அல்லது கெட்டியாகவோ இல்லாமல் இருப்பது நல்லது.

விருப்பப்பட்டால், எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். மற்ற சுவைகளுக்காக நீங்கள் இஞ்சி அல்லது புதினா சேர்க்க விரும்பினால், மாம்பழத்துடன் சேர்த்து அரைக்கும்போதே சேர்க்கலாம்.

ஃப்ரூட்டியில் ஏதேனும் திப்பிகள் அல்லது நார்ச்சத்து அதிகமாக இருப்பதாக நினைத்தால், ஒரு மெல்லிய துணியை அல்லது வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டிக்கொள்ளலாம். இது மிகவும் மிருதுவான ஃப்ரூட்டியை கொடுக்கும்.

தயாரித்த ஃப்ரூட்டியை சுத்தமான பாட்டில்கள் அல்லது ஜாடிகளில் ஊற்றி, குளிர்சாதன பெட்டியில் குறைந்தது 2-3 மணி நேரம் குளிர வைக்கவும். நன்றாக குளிர்ந்த பிறகு பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

நீண்ட கால சேமிப்புக்கான வழி:

ஃப்ரூட்டியை நீண்ட நாட்களுக்கு சேமிக்க விரும்பினால், அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நுரை வந்தால் அதை நீக்கிவிடவும். பின்னர் ஆறவிட்டு, சுத்தமான, காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இந்த முறையில் தயாரித்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். ஆனால், வீட்டில் தயாரிப்பது என்பதால், விரைவில் பயன்படுத்துவது சுவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பானிபூரி சாப்பிட முயன்ற பெண் திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு.. ஷாக்கிங் வீடியோ!
சாம்பாரை கண்டுபிடித்த ஊர் தஞ்சாவூர்..! சசி தரூர் சொன்ன சாப்பாட்டு மேட்டர்!