மணத்தக்காளி வத்தல் குழம்பு – பாரம்பரிய கிராமத்து ஸ்டைலில் செய்வது எப்படி?

தமிழ்நாட்டு வத்தல் குழம்பிற்கு தனியான ரசிகர் கூட்டமே உண்டு. நினைத்தாலே நாவில் எச்சில் ஊற வைக்கும். வத்தக் குழம்பில் மணத்தக்காளி சேர்த்து, லேசான கசப்பு சுவையுடன் செய்யப்படும் வத்தல் குழம்பு எப்போதும் அல்டிமேட் தான்.

traditional manathakkali vathal kulambu recipe

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் முக்கியமான ஒன்று மணத்தக்காளி வத்தல் குழம்பு. இது மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி வத்தலை கொண்டு செய்யப்படும் ஊறுகாய் மாதிரியான குழம்பாகும். காரசாரமான சுவை, மொறுமொறுப்பான வத்தல் மற்றும் குழம்பின் நெகிழ்வான தன்மை – இந்த மூன்றும் சேரும் போது, நம்மை வழக்கத்தை விட ஒரு பிடி அதிகமாக சேர்த்து சாப்பிட இழுக்கும் வகையில் இருக்கும். வீட்டிலேயே இந்த குழம்பை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

Latest Videos

மணத்தக்காளி வத்தல் – 1/4 கப்
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
புளி – பெரிய எலுமிச்சை அளவு (தண்ணீரில் கரைத்து வைத்தது)
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சிறிய வெங்காயம் – 10 (பொதியாக நறுக்கியது)
பூண்டு – 5 பல் (நறுக்கியது)
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
குழம்பு பொடி – 1 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
வெல்லம் – 1/2 டீஸ்பூன் (சுவையை அதிகரிக்க விரும்பினால்)
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மணத்தக்காளி வத்தலை மிதமான தீயில் நன்கு மொறு மொறுப்பாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் சேர்த்து வெடிக்கும் வரை வதக்கவும்.
- பின் வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், குழம்பு பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
- இப்போது கரைத்த புளி நீரை வடிகட்டி சேர்க்கவும்.
- புளி நன்றாக கொதிக்க விடவும். இதனால் குழம்பின் சுவை அதிகரிக்கும்.
- பின்னர் வறுத்த மணத்தக்காளி வத்தலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- இறுதியாக, வெல்லம் சேர்த்து குழம்பை ஒரு இறுதி கொதி வரும் வரை வேகவிடவும்.

பரிமாறும் முறை:

மணத்தக்காளி வத்தல் குழம்பு சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து பரிமாறினால் அதன் சுவை இன்னும் அதிகரிக்கும். வெந்தயக் கீரை கூட்டு, தொக்கு, அப்பளம், ஆம்பிலேட் ஆகியவை இதற்கு சிறந்த சைட்டிஷ்ஷாக அமையும்.

மேலும் படிக்க:சூப்பர் சுவையில் நிலக்கடலை சட்னி...இப்படி செய்து பாருங்க

சமையல் குறிப்புகள்:

- மணத்தக்காளி வத்தலை நன்கு வறுத்தால் அதன் கசப்பு குறையும்.
- குழம்பின் பதம் அடைய, புளி நீரை தீயை மிதமாக வைத்து கொதிக்க விடுவது முக்கியம்.
- சிறிதளவு வெல்லம் சேர்ப்பதால் குழம்பின் சுவை நன்றாக திரண்டுவிடும்.
- வத்தல் குழம்பில் நல்லெண்ணைய் பயன்படுத்தினால் கிராமத்து சுவையில் குழம்பு கிடைக்கும்.
- வழக்கமான குழம்புகளை போல் நீர்ப்பு தன்மை இல்லாமல் பேஸ்ட் போல், எண்ணெய் பிரிந்து வரும் அளவிற்கு கொதிக்க விட்டால் குழம்பின் சுவை அதிகரிக்கும்.

vuukle one pixel image
click me!