கல்யாண வீடுகளில் எப்போது விருந்திற்கு தான் தனி இடம் உண்டு. விருந்தினர்களின் மனதையும், வயிற்றையும் நிறைவடைய செய்யும் ஒரு விஷயமாகும். அதிலும் கல்யாண வீட்டு விருந்தில் கடைசியாக பரிமாறப்படும் ரசத்தின் சுவை அல்டிமேட்டாக இருக்கும். இதை நம்ம வீட்டிலும் செய்து அசத்தலாம்.
தமிழர்களின் திருமணங்களில் உணவிற்கு மிக முக்கியமான இடம் உண்டு. மற்ற எதை மறந்தாலும், கல்யாண வீட்டில் சாப்பிட்ட சாப்பாடு பல ஆண்டுகள் கழித்தும் மனதில் நிற்கும். கல்யாணத்திற்கு வந்தவர்களை பேசவும் வைக்கும். ஒரு கல்யாணத்திற்கும் சரி, அதில் கலந்த கொள்பவர்களும் முழுமையான நிறைவை கொடுப்பது தடபுடல் விருந்து தான். சைவமோ, அசைவமோ அதில் பைனல் டச்சாக கொடுக்கப்படும் ரசம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த ரசம் சாதாரண ரசத்திலிருந்து மாறுபடும். இது மிக நயமிக்க மணமும், அருமையான சுவையும் கொண்டது. அப்படி ஒரு சுவையான ரசத்தை கல்யாண வீட்டில் எப்படி வைக்கிறார்கள்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
கல்யாண வீட்டு ரசத்தின் சிறப்பு :
- கல்யாண வீட்டு சிறப்பு ரசம், இதன் சுவையான மணம் அனைவரையும் கவரும்.
- இது அதிக மசாலா சேராமல், மெல்லிய, ஆனாலும் ஆழமான சுவையை கொண்டிருக்கும்.
- உணவின் இறுதியில் பரிமாறப்படும், ஆனால் உணவின் முழுமையை இது உணர்த்தும்.
தேவையான பொருட்கள்:
(5-6 பேருக்கு போதுமான அளவு)
தக்காளி – 3 (நன்றாக நசுக்கியவை)
பூண்டு – 5 பல் (அழுத்தி உடைத்தது)
பச்சை மிளகாய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி இலை – சிறிதளவு
புளி – ஒரு சிறிய பந்து அளவு (1/4 கப் புளிக்கரைசல்)
துவரம் பருப்பு தண்ணீர் – 1/2 கப் (பருப்பு வேகவைத்த தண்ணீர்)
உப்பு – தேவையான அளவு
நெய் / எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 3 1/2 கப்
மேலும் படிக்க: தெலுங்கானா ஸ்பெஷல் நாட்டு கோழி குரா...வேற வெலவல் சுவையில்
செய்முறை :
- மசாலா அரைக்க ஒரு கல்லில் மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தக்காளி, புளிக்கரைசல், உப்பு, மிளகு-சீரகம் பொடி, கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
இதை மிதமான சூட்டில் 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- கொதித்த பிறகு, துவரம் பருப்பு நீரை சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். அதிகம் கொதிக்க விடக்கூடாது, லேசாக கொதி வந்ததும் அடுப்பை குறைக்கவும்.
- ஒரு சிறிய கடாயில் நெய் அல்லது எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதை ரசத்தில் சேர்த்து, இறுதியாக நன்றாக கிளறவும்.
- ரசத்தில் நன்றாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து, மூடியை மூடி 5 நிமிடங்கள் ஓய்வெடுக்க விடவும்.
சுவை கூட்ட சிறப்பு டிப்ஸ் :
- ரசத்தில் நெய்யில் வறுத்த மிளகு-சீரகம் பொடி சேர்த்தால், இன்னும் சிறப்பான சுவை கிடைக்கும்.
- இது சாதத்தோடு மட்டுமல்லாது, சுவையான குடிப்பதற்கும் ஏற்றது.
- புளிக்கரைசலை நேராக சேர்க்காமல், முதலில் கொதிக்க விட்டு பின்னர் சேர்த்தால், ரசத்தின் அமிலத்தன்மை சரியாக இருக்கும்.
கல்யாண வீட்டு ரசம் என்பது உணவு விருந்தின் முடிவை இனிமையாக்கும் ஒரு சிறப்பான சூப் போன்ற உணவு. இது உடலில் செரிமானத்தையும் அதிகப்படுத்தும். உங்கள் வீட்டிலேயே கல்யாண வீட்டு ரசம் செய்து பாருங்கள், அதன் தனி சுவையை அனுபவித்து மகிழுங்கள்.