ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர் இப்போ வீட்டிலேயே செய்யலாம்

கடாய் பன்னீர் சாப்பிடுவதற்கு ரெஸ்டாரன்டிற்கு தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஈஸியாக நம்முடைய வீட்டிலேயே அதை செய்து அசத்த முடியும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

how to make restaurant style kadai paneer masala at home

இந்திய உணவுகளின் சுவையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுவது பன்னீர் உணவுகள். ஒரு காலத்தில் வட மாநிலங்களில் மட்டும் பிரபலமாக இருந்த இந்த உணவுகள் தற்போது நம்ம ஊரிலும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அனைவரின் நாக்கிலும் ஒட்டிக் கொண்டு விட்டது.  கடாய் பன்னீர் சாப்பிடுவதற்கு இனி ரெஸ்டாரன்டிற்கு கிளம்பி போக வேண்டியது கிடையாது. வீட்டிலேயே செம சூப்பராக செய்து கொடுத்து அசத்தலாம். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

Latest Videos

பன்னீர் – 200 கிராம் (கட்டிகளாக வெட்டியது)
குடைமிளகாய் – 1 (பச்சை, மஞ்சள், சிவப்பு கலந்திருந்தால் சிறப்பு)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 3 (அரைத்தது)
பூண்டு – 5 பற்கள் (நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச் (துருவியது)
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கஸ்தூரி மெத்தி – 1 டீஸ்பூன் (கைகளை வைத்து குழைத்து இட வேண்டும்)
கிரீம் அல்லது பால் – 2 டீஸ்பூன் (சுவைக்கு மேலும் மிருதுவாக)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்/நெய் – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – அலங்காரத்திற்காக
வெண்ணெய் – 1 டீஸ்பூன் (சுவை மற்றும் மணம் அதிகரிக்க)
காய்ந்த மிளகாய் – 2 (தூள் செய்து சேர்க்க)
நல்லெண்ணெய் அல்லது பட்டர் – 1/2 டீஸ்பூன் (சுவைக்கு சிறப்பு சேர்க்க)

மேலும் படிக்க: ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அக்காரவடிசல் ரெசிபி...அதே பாரம்பரிய சுவையில்

தயாரிக்கும் முறை:

- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு பூண்டு, இஞ்சி சேர்த்து வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.
- தக்காளி விழுது சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வேக விடவும்.
- மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு, காய்ந்த மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பிறகு பன்னீர் சேர்க்கவும்.
- சிறிதளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
- இறுதியாக கஸ்தூரி மெத்தி, கரம் மசாலா தூள், வெண்ணெய் சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி அணைக்கவும்.
- மேலும் கிரீம் அல்லது பட்டர் சேர்த்து நன்கு கலந்து இறக்கலாம்.

பரிமாறும் விதம்:

- இந்த கடாய் பணீர் மசாலாவை சூடாக நாண், சப்பாத்தி, பரோட்டா, குலச்சா, அல்லது ஜீரா ரைஸ் போன்ற உணவுகளுடன் பரிமாறலாம்.
- சென்னா பட்டர் சேர்த்தால், உணவகத்துக்கு இணையான க்ரீமியான சுவை கிடைக்கும்.
- சிறிதளவு தேங்காய் பால் சேர்த்தால், நெய் ருசி மேலும் அதிகரிக்கும்.

vuukle one pixel image
click me!