காரசாரமான வெற்றிலை துவையல் செய்வது எப்படி?

 சாப்பிட்ட பிறகு ஜீரணத்திற்காக பயன்படுத்தும் பொருளாக மட்டும் தான் வெற்றிலையை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெற்றிலையை வைத்து உணவு செய்து சாப்பிடலாம். இது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் சுவையான உணவாக இருக்கும்.
 

healthy and spicy vetrilai thuvaiyal recipe

பழங்காலம் முதலே நாட்டு மருத்துவத்தில் மிக முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுவது வெற்றிலை. இது ஜீரக சக்தி மிக முக்கியமானதாகவும், வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. வழக்கமாக திருமணம் போல் விசேஷம், விருந்துகளில் உணவிற்கு பிறகு ஜீரணத்திற்காக சாப்பிடவும், மங்கல பொருளாகவும் மட்டுமே வெற்றிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வெற்றிலையில் காரசாரமாக துவையல் செய்து ஒரு முறை சாப்பிட்டு பாருங்க.

வெற்றிலை நன்மைகள் :

Latest Videos

- மரபு சித்த மருத்துவம் சொன்ன 'Green Gold'செரிமான சக்தியை தூண்டும்
- வாயு தொல்லைகளை ஒழிக்கும்
- ஈரல் சுத்திகரிப்பு செய்கிறது
- ஆன்டி-பாக்டீரியல் திறன் கொண்டது
- இரத்த சுழற்சியை அதிகப்படுத்தும்.
- இத்தனை நன்மைகள் கொண்ட வெற்றிலை, நாம் தினமும் பல விதமாக சாப்பிடுவதை வழக்கமாக்கினால், உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

மேலும் படிக்க: குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கணுமா? பெற்றோர்களுக்கான 5 சூப்பர் டிப்ஸ்!!

தேவையானவை:

வெற்றிலை - 6–8 இலைகள் (புதியவை)
சிறிய வெங்காயம் -  4 (தட்டியது)
பச்சை மிளகாய் - 2 (விருப்பப்படி)
பூண்டு - 3 பல்லி
உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் (துருவியது) - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு -  1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
இஞ்சி (விருப்பமானது) - சிறிதளவு

செய்முறை:

- முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, உளுத்தம்பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை வதக்கவும்.
- வெங்காயம் நிறம் மாறியதும், துருவிய தேங்காய், இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.
- இறுதியில் நன்றாக கழுவிய வெற்றிலை இலைகளை சேர்த்து, வெறும் 20–30 வினாடிகள் மட்டும் கலக்கவும். (கடுமையாக வதக்கக்கூடாது – மருத்துவ குணம் கெட்டுவிடும்!)
- இந்த கலவையை ஆற விட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.
- ஒரு சிறு கடாயில் கடுகு தூவி தாளிக்கவும். இதை அரைத்த துவையலில் ஊற்றி கலக்கவும்.

எதனுடன் சேர்த்து சாப்பிடலாம்?

- வெதுவெதுப்பான சாதத்துடன்
- சப்பாத்தி/தோசைக்கு சைடிஷாக
- பச்சைப் பூண்டு குழம்பு / பருப்பு ரசத்துடன்
- ஒரு சிறு கோப்பை தயிர் சாதத்துடன் கூட சூப்பர் ஜோடி

மேலும் படிக்க: வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க இந்த 9 பழங்களை சாப்பிடுங்க!!

சிறப்பு குறிப்புகள்:

- வெற்றிலை வகையை சரியாக தேர்வு செய்ய வேண்டும் (பசுமை நிறம், சதுர வடிவம் சிறந்தது).
- அதிகமாக வதக்கினால், வெற்றிலையின் நாட்டு வாசனையும் மருந்து உற்ற தன்மையும் இழந்துவிடும்.
- பச்சை மிளகாய் காரம் மட்டுமல்லாமல் ஒரு பசுமை நிறத்தையும் தரும். அழகு கூட முக்கியம்!

vuukle one pixel image
click me!