பூப்போல கோதுமை இட்லி எப்படி செய்வது ?

கோதுமையில் சப்பாத்தி, தோசை, உப்புமா என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கோதுமையில் பூப்போல இட்லி செய்து சாப்பிட்டு பாருங்கள். இது ஆரோக்கியமானது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். 


இட்லி என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவு. பொதுவாக, அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை பயன்படுத்தி இட்லி செய்வோம். ஆனால், கோதுமை ரவை (சமோலி) கொண்டு செய்யப்படும் கோதுமை இட்லி ஆரோக்கியமானதும், குறைந்த கலோரி கொண்டதும், மென்மையானதும் ஆகும். இதை காலை உணவாகவும், இரவு உணவாகவும் சாப்பிடலாம். பூப்போல மென்மையான கோதுமை இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

Latest Videos

கோதுமை மாவிற்கு:

கோதுமை ரவை – 2 கப்
தயிர் – 1 கப் (புளிப்பு இல்லாதது)
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
வெட்டிய கேரட் – 2 டேபிள்ஸ்பூன் (விருப்பம்)
கொத்தமல்லி – சிறிதளவு (நறுக்கியது)
இஞ்சி – 1 டீஸ்பூன் (துருவியது)
முந்திரி பருப்பு – 5 (வறுத்தது)
சமையல் சோடா  – 1/2 டீஸ்பூன்

மேலும் படிக்க: தினமும் கோழிக்கறி சாப்பிடுபவரா நீங்கள்? ...இதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிதளவு
மிளகாய் – 1 (நறுக்கியது)

கோதுமை இட்லி செய்யும் முறை :

- கோதுமை மாவு தயார் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை, தயிர், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இதை 15-20 நிமிடம் ஊற விடவும், அதனால் கோதுமை மென்மையாகும்.
- ரவை மென்மையாக, நன்றாக ஊறினால் இட்லி மேலும் சுவையாகவும். சாஃப்டாகவும் இருக்கும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய், கருவேப்பில்லை சேர்த்து வறுக்கவும்.
- இதனை கோதுமை மாவில் சேர்த்து, நன்றாக கலக்கவும்.
- மேலே இஞ்சி, கேரட், கொத்தமல்லி, முந்திரி பருப்பு சேர்த்து கிளறவும்.
- இறுதியாக, மாவில் சமையல் சோடா சேர்த்து தண்ணீருடன் மிதமாக கரைத்து ஊற்றவும்.
- இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, ஆவியில் இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.
- 10-12 நிமிடம் வேகவைத்த பிறகு, ஒரு குச்சி வைத்து பார்த்தால் ஒட்டாமல் வந்தால், இட்லி வெந்துவிட்டதாக அர்த்தம்.
- இட்லிகளை மெதுவாக எடுத்து, சூடாக பரிமாறலாம்.

கோதுமை இட்லிக்கு சிறந்த சைட் டிஷ் :

- தேங்காய் சட்னி சூப்பரான காம்போவாக இருக்கும்.
- புதினா சட்னி சிறிது காரமான, புளிப்பு சுவையாக இருக்கும்.
- கடலை சட்னி சற்று கரகரப்பாக இருக்கும் இட்லிக்கு சிறந்த சேர்க்கை.
- சாம்பார், பருப்பு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- தக்காளி குருமா , மசாலா உடன் காரசாரமாகவும் இருக்கும்.

கோதுமை இட்லியின் ஆரோக்கிய நன்மைகள் :

- நார்ச்சத்து அதிகம் . செரிமானத்திற்கு உதவும்.
- குறைந்த கலோரிகள், எடை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த உணவு.
- கொழுப்பு இல்லாதது எஜ்பதால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
- சுவையான மற்றும் மென்மையான உணவு என்பதால் குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் உகந்தது.

மேலும் படிக்க: உங்கள் குழந்தை அதிக நேரம் மொபைல் பார்க்கிறதா?...கட்டுப்படுத்த இதை செய்து பாருங்க

சிறப்பு குறிப்புகள் :

- இட்லியை மேலும் மென்மையாக பெற சமையல் சோடா சேர்த்து, 10 நிமிடங்கள் புளிக்க வைக்கலாம்.
- புளிக்காத தயிர் பயன்படுத்துவது நல்லது, அதிக புளிப்பு இருந்தால் சுவை மாறும்.
- தண்ணீர் அளவு சரியாக இருக்க வேண்டும் . அதிகம் என்றாலும், குறைவாக இருந்தாலும் இட்லி கடினமாகி விடும்.
- கோதுமை இட்லியை பிரஷர் குக்கரில் செய்ய விரும்பினால், மிதமான தீயில் மூடி வேக வைக்கலாம்.

கோதுமை இட்லி என்பது ஒரு ஆரோக்கியமான, எளிதில் செரிக்கும் மற்றும் விரைவாக செய்யக்கூடிய உணவாகும். வெறும் 30 நிமிடங்களில் இந்த சுவையான இட்லியை செய்து குடும்பத்துடன் ருசிக்கலாம்.

click me!