ரௌடிகளிடம் சிக்கிய இனியா? ஏய் தொலைச்சிடுவேன்... கேரளாவில் மாஸ் காட்டிய பாக்கியா! லேட்டஸ்ட் அப்டேட்!

First Published | Sep 12, 2023, 9:18 PM IST

பாக்கிய லட்சுமி சீரியலில், இனியா ரௌடிகளிடம் சிக்கி கொள்ள.. செம்ம மாஸாக பாக்கியா உள்ளே என்ட்ரி கொடுத்து மிரட்டிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், முக்கிய சீரியல் 'பாக்கிய லட்சுமி'. அப்பா - அம்மா பார்த்து திருமணம் செய்து வைத்த பாக்கியா படிக்காதவர், உலகம் அறியாதவர் என எப்போதும் மட்டம் தட்டி கொண்டே இருந்த கோபி, பின்னர் கல்லூரியில் படித்த போது காதலித்த ராதிகாவை மீண்டும் சந்திக்க, அவரிடம் ஏதேதோ பேசி மயக்கி பின்னர் ஒருவழியாக அவரையே திருமணம் செய்து கொண்டார்.

ராதிகாவை திருமணம் செய்து கொள்ள கோபி செய்த தில்லுமுல்லு கொஞ்சம் நஞ்சம் அல்ல. பல விஷயங்களில் சிக்கிக்கொண்டு... தவிப்பதும், வில்லன் போல் யோசித்து கடைசியில் அது காமெடியாக மாறுவது என,  அளப்பறையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் கோபி. ஒருவழியாக பாக்கியா கோபியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் சுதந்திர பறவை போல் தனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் தன்னை இந்த உலகில் நிரூபிக்கும் விதமான பல விஷயங்களை செய்து கொண்டுள்ளார்.

நிறைமாத வயிற்றோடு... கொசுவலை போன்ற மாடர்ன் உடையில்... பிரக்னன்சி போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை காயத்திரி!


ஈஸ்வரி மசாலாவில் ஆரம்பித்த பாக்கியா, தற்போது கேட்டரிங், ஸ்போக்கன் இங்கிலிஷ், கல்லூரி படிக்கு என கலக்கி கொண்டிருக்கிறார். இவருக்கு உறுதுணையாக ஒட்டுமொத்த குடும்பமும் செயல்படுகிறது. ஆனால் கோபியின் நிலை தான் கொஞ்சம் பாவம். ராதிகாவிடம் பாடாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக பாக்கிய லட்சுமி சீரியல் TRP ரேட்டிங்கில் சற்று டல் நடித்துள்ள நிலையில், சீரியலை விறுவிறுப்பாக்கும் முயற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் சீரியல் குழுவினர். இந்நிலையில் தற்போது பாக்கிய லட்சுமி சீரியலில் இருந்து வெளியாகியுள்ள புரோமோ படு மாஸாக உள்ளது. 

என் மகளுக்கும் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் அப்படி நடந்தது! இருந்தாலும் இதை பண்ணுங்க... குஷ்பு வைத்த கோரிக்கை!

மகளை அழைத்து கொண்டு பாக்கிய புராஜெக்ட் விஷயமாக கேரளா வந்துள்ள நிலையில், அங்கு மூன்று ரவுடிகள் இனியாவை மடக்கி , நீ டூரிஸ்ட்டா, உன் பெயர் என்ன என கேள்வி கேட்டு ரவுண்டு கட்டி மிரட்டுகிறார்கள். என்ன செய்வது என தெரியாமல் இனியா பயந்து போய் நிற்க... அமிர்தாவிடம் பேசி கொண்டே இதனை கவனிக்கிறார், பாக்கியா.

பின்னர் செம்ம மாஸாக, ஏன் இதுக்கு முன்னாடி பொண்ணுகளையே பார்த்தது இல்லையா என அவர் ரவுடிகளிடம் கேட்க, அவர்கள் நீ யாருனு என கேட்க என் பொண்ணு கிட்ட இப்படி நடந்து கிட்ட நான் கேட்பேன் என கூறுகிறார். அந்த ரவுடிகளின் ஒருவன், நாங்க யாருனு உனக்கு தெரியாது என ஓவராக சவுண்டு கொடுக்க, பதிலுக்கு பாக்கியாவும் ஏன்... தொலைச்சிடுவேன். உன்ன விட பெரிய வில்லனையெல்லாம் நான் பார்த்துவிட்டேன் என கூறி சண்டை போட்டு மகளை காப்பாற்றுகிறார். இனியாவோ ஒன்னும் தெரியாத பூனை போல் இருந்த நம்ப அம்மா பாக்கியாவா? இது என வாயடைத்து போய் பார்க்கிறார். இந்த ஒரு கேரளா ட்ரிப்பில், இதுவரை பல ட்விஸ்ட் நடந்த நிலையில், அடுத்தடுத்து என்னென்ன நடக்குமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

Anitha Vijayakumar: நீங்க டாக்டரா.. இல்ல ஆக்டரா? 50 வயதிலும் 25 வயசு மகளுக்கு டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமார்

Latest Videos

click me!