அங்கு நந்தினி, சக்தி, ரேணுகா என எல்லோரும்... சாப்பாட்டுடன் நிற்பதை பார்த்து விட்டு, ஏதோ சோறாக்கி எடுத்துக்கிட்டு போற மாதிரி இருக்கு என கேட்க, அதற்க்கு நந்தினி "எப்போதும் போல் சும்மா கேள்வி கேட்டு இருக்காதீங்க... சாமி குத்தம் ஆகிடும்." என்று சொல்கிறார். உடனே கதிர் "அப்போ வா நானும் சேர்ந்து வரேன் நாலு பேருமா சேர்ந்து போயிட்டு வந்துரலாம் என்று நந்தினியிடம் கூற, அதற்கு நந்தினி இந்த நாலு... 40 எல்லாம்... மாமாவுக்கு சுத்தமா பிடிக்காது என சொல்ல, அதற்கு குணசேகரன் ஏய் மரியாதையா உண்மைய சொல்லிடு என நந்தினியை மிரட்டுகிறார்.