போனில் பேசிய சில நிமிடத்தில் மாரிமுத்து மரணம்! அடுத்த குணசேகரன் யார்? 'எதிர்நீச்சல்' இயக்குனர் திருச்செல்வம்!

First Published | Sep 8, 2023, 1:52 PM IST

'எதிர்நீச்சல்' சீரியலில் ஆதி குணசேகரனாக அனைவரையும் ஆட்டிப்படைத்து வந்த மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் திருச்செல்வம் கடைசியாக குணசேகரனிடம்  பேசிய போது அவர் கூறிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

G Marimuthu passed away

மாரிமுத்து ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, திரையுலகின் மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர். அடித்து பிடித்து முதலில் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டு, இதை தொடர்ந்து ராஜ்கிரண் இயக்கிய படத்தில் துணை இயக்குனராக மாறினார். பின்னர் மணிரத்தினம், சீமான், எஸ் ஜே சூர்யா, வசந்த் போன்ற பிரபலங்களின் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியதோடு மட்டுமின்றி, இயக்குனராகவும் மாறினார்.

Ethirneechal Marimuthu

இவர் துணை இயக்குனராக பணியாற்றிய படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இவர் இயக்கிய 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாமல் போனது.  பின்னர் மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை தட்டி தூக்கினார். 

மாரிமுத்து மரணத்திற்கு ராதிகா முதல் வைரமுத்து வரை கண்ணீருடன் இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்..!
 


Ethirneechal Marimuthu

இவர் குணச்சித்திர வேடத்தில் நடித்த மருது, பரியேறும் பெருமாள், போன்ற படங்களில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்கு கவனிக்கப்பட்டது. ஆனால் இவரின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது, சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடர் தான். இந்த சீரியலின் மூலம் கிடைத்த பிரபலத்தால் அடுத்தடுத்து ஜெயிலர் உட்பல பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார்.
 

இந்நிலையில் இன்று காலை 'எதிர்நீச்சல்' சீரியல் குழுவினர் அனைவரும் படப்பிடிப்புக்கு தயாராகி கொண்டிருக்கும் போது, மாரிமுத்துவிடம் இருந்து ஒரு போன் இயக்குனர் திருச்செல்வத்திற்கு வந்துள்ளது. அதில் பேசிய அவர்... நீங்க படப்பிடிப்பை நடத்தி கொண்டே இருங்கள். நான், ஒரு படத்தின் டப்பிங் இருக்கிறது அதை முடித்துக்கொண்டு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன் என கூறியுள்ளார். இயக்குனரும் சரி என வைத்துவிட்டார்.

என் மகனை படிக்க வச்சது அஜித் சார் தான்! கையில இருக்குறத அப்படியே கொடுத்துடுவார்.. மாரிமுத்து பகிர்ந்த தகவல்!
 

இந்த போன் வந்த சில நிமிடங்களில் இயக்குனர் திருச்செல்வத்திற்க்கு வந்த போனில்... மாரடைப்பு காரணமாக மாரிமுத்து இறந்து விட்டார் என கூறியுள்ளனர். உடனடியாக ஷூட்டிங்கை பேக் அப் சொல்லிவிட்டு, இயக்குனர் திருச்செல்வம் உள்ளிட்ட ஒட்டு மொத்த எதிர்நீச்சல் சீரியல் குழுவினரும் மாரிமுத்துவை பார்க்க மருத்துவமனையிலும் வீட்டிலும் கூடினர். இந்த தகவல் பற்றி, இயக்குனர் திருச்செல்லாம் பேசியுள்ளார்.
 

தொடர்ந்து பேசிய அவர், இப்படி நடக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்து இறந்திருந்தால் கூட மனதை தேற்றி கொள்ளலாம். ஆனால், இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் அனைவருமே பேரதிர்ச்சியில் இருக்கிறோம்.எங்களை விட மாரிமுத்து சாரின் குடும்பத்தின் மனநிலையை யோசித்து கூட பார்க்கமுடியவில்லை என கண்ணீருடன் கூறினார். அதே போல் அடுத்த குணசேகரன் யார் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, தற்போது மருத்துவமனையில் இருப்பதால் எதையும் முடிவெடுக்கும் மனநிலையில் இல்லை. ஆனால் எதிர நீச்சல் தொடரின் வெற்றிக்கு மாரிமுத்து கதாபாத்திரம் தான் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது என அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. 

மாரிமுத்து மறைவால் எதிர்நீச்சல் தொடருக்கு சிக்கல்... அடுத்த ஆதி குணசேகரன் யார்?

Latest Videos

click me!