இந்த சீரியல் துவங்கிய சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த நிலையில், பிரியங்கா திடீர் என தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டதால் கணவரின் விருப்பத்திற்கு ஏற்ப, சீரியலில் இருந்து விலகி.. குடும்பம், குழந்தை என வாழ உள்ளதாக தெரிவித்து இந்த சீரியலில் இருந்து அதிரடியாக விலகினார். இவர் விலகியதால், தற்போது இந்த சீரியலில், மிகமிக அவசரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை ப்ரியங்கா நடித்து வருகிறார்.