வாணி போஜனை தொடர்ந்து சன் டிவி சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பார்ட்! கதாநாயகியாக மாறிய சீரியல் நடிகை !

First Published | Aug 31, 2023, 5:17 PM IST

வாணி போஜனை தொடர்ந்து சன் டிவி சீரியல் நடிகை ஒருவர், வெள்ளி திரையில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள தகவலை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.
 

Hima Bindhu

சமீப காலமாகவே சீரியலில் நடித்து பிரபலமாகும் நடிகைகளுக்கு, வெள்ளித்திரை வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த வகையில், பிரியா பவானி சங்கர், வாணி போஜனை தொடர்ந்து கோலிவுட் திரையுலகில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கிறார் பிரபல சீரியல் நடிகை.

Hima Bindhu

பிரியா பவானி சங்கர் விஜய் டிவியில் இருந்த வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும்,  வாணி போஜன் சன் டிவி சீரியலில் நடித்த பிரபலமாகி அதன் மூலம் வெள்ளி திரை வாய்ப்பை கைப்பற்றியவர்.

அமெரிக்க பிரபலத்தின் மனைவி உட்பட இன்ஸ்டாகிராமில் நயன்தாரா ஃபாலோ பண்ணும் 5 முக்கிய பிரபலங்கள் ?
 

Tap to resize

Hima Bindhu

இந்நிலையில் வாணி போஜனை தொடர்ந்து மற்றும் ஒரு சன் டிவி சீரியல் நடிகை வெள்ளி திரையில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்க உள்ளார்.  அவர் வேறு யாரும் இல்லை தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'இலக்கியா' தொடரில் நடித்து வரும் ஹேமா பிந்து தான். இவர் ஏற்கனவே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'இதயத்தை திருடாதே' என்கிற சீரியலிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hima Bindhu

இவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள நிலையில், பின்னர் வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்காததால்,  சீரியல் நடிகையாக மாறினார். சீரியல் மூலம் கிடைத்த பிரபலம் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதன்படி கவுண்டமணி பல வருடங்கள் கழித்து கதையின் நாயகனாக நடித்து வரும், 'ஒத்த ஓட்டு முத்தையா' என்கிற திரைப்படத்தில் தான் ஹேமா பிந்து கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஈஸ்வரியை பார்த்து வெண்பா சொன்ன வார்த்தை..! ஷாக்கான ஜீவானந்தம்... 'எதிர்நீச்சல்' சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட்!

Hima Bindhu

இந்த திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்ட போது, ஹேமா அதில் கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலர் ஹேமாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனினும் வாணி போஜன் அளவுக்கு ஹேமா வெள்ளித்திரையில் மின்னுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

click me!