கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளும் ஓணம் பண்டிகையையொட்டி ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
27
Rithika Onam Celebration
பாக்யலட்சுமி சீரியலில் அம்ரிதாவாக நடித்து பிரபலமானவர் ரித்திகா. இவர் தன்னுடைய வீட்டில் பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
37
Shivani Onam Celebration
விஜய் டிவியில் பகல் நிலவி, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நடிகை ஷிவானி ஓணம் பண்டிகைக்காக கேரளா புடவை அணிந்து நடத்திய அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
47
Raveena Onam Celebration
விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளன ராகம் சீரியலின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ரவீனா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலக்கிய இவர் ஓணம் பண்டிகைக்காக நடத்திய ஸ்பெஷல் போட்டோஷூட் இது.
சின்னத்திரையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனின் மனைவியாக நடித்து பிரபலமான நடிகை கனிகா ஓணம் பண்டிகைக்காக கேரளா புடவை அணிந்தபடி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் தான் இவை.
67
Monisha Onam Celebration
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும், குக் வித் கோமாளியிலும் காமெடி குயினாக பிரபலமடைந்து, தற்போது மாவீரன் படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி இருக்கும் மோனிஷாவின் கலக்கலான ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ் இது.
77
Sivaangi Onam Celebration
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் 3 சீசன்களில் கோமாளியாகவும், அண்மையில் நடந்து முடிந்த 4-வது சீசனில் குக் ஆக களமிறங்கி பைனல் வரை சென்று அசத்திய சிவாங்கியின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ.