யூடியூபரை காதலித்து கரம்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை ஜனனி - வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

First Published | Aug 27, 2023, 11:35 AM IST

யூடியூபர் இனியன், சீரியல் நடிகை ஜனனி பிரதீப் ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில், திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Iniyan, janani Pradeep

சினிமாவை போல் சீரியல் நடிகர், நடிகைகளும் காதலித்து திருமணம் செய்துகொள்வது என்பது தொடர்கதை ஆகி வருகிறது. மெட்டி ஒலி சேத்தன் - பிரியதர்ஷினி, சரவணன் மீனாட்சி செந்தில் - ஸ்ரீஜா, ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் - ஆலியா மானசா, திருமணம் சீரியலில் நடித்த சித்து - ஷ்ரேயா என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், தற்போது மற்றுமொரு சீரியல் நடிகை ஒருவர் யூடியூப் பிரபலத்தை காதலித்து கரம்பிடித்து உள்ளார்.

janani Pradeep marriage

சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஜனனி பிரதீப். இவர் தன்னுடன் ஆல்பம் பாடலில் நடித்த யூடியூப் பிரபலமான இனியன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் அவ்வப்போது தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவர்கள் கடந்த மாதம் தான் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதையும் படியுங்கள்... லியோ படத்தின் முன்பதிவு 6 வாரத்திற்கு முன்பே தொடங்குமென அறிவிப்பு... ஒரு முடிவோட தான் இருக்காங்க போல!

Tap to resize

Iniyan, janani Pradeep wedding

காதலை அறிவித்த ஒரே மாதத்தில் அந்த ஜோடி திருமணமும் செய்துகொண்டுள்ளது. இனியன் - ஜனனி பிரதீப் ஜோடியின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. அவர்களது திருமணத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிபிரியா, சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால் உள்பட ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இனியன் - ஜனனி பிரதீப் ஜோடியின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

janani Pradeep wedding Photos

காதல் திருமணம் செய்துகொண்ட இனியன் - ஜனனி பிரதீப் ஜோடிக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். யூடியூப் மூலம் பிரபலமான இனியன், வித்யா நம்பர் ஒன் என்கிற சீரியலில் சஞ்சய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள்ஸ் என்கிற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சி மூலம் இவர் பாப்புலர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தலை நிறைய மல்லிப்பூ இருக்கு... தாவணிய எங்கம்மா! யாஷிகாவின் கவர்ச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Latest Videos

click me!