இதைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தில் பாண்டியம்மாவாக நடித்த, பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதே போல், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.