விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'பாக்கிய லட்சுமி' தொடருக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. எப்படியும் டாப் 10 TRP லிஸ்டில் இடம்பிடித்து விடும் இந்த தொடர், 'கணவரால் கைவிட பட்ட, பெண்கள் சாதிக்க முடியும் என்கிற வலுவான கருத்தை எடுத்து கூறும் விதமாக ஒளிபரப்பாகி வருகிறது.
கோபியை பிரிந்ததில் இருந்து, பாக்கியாவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தாலும், பாவம் கோபி தான் அடுத்தடுத்து பல பிரச்சனைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் புதிய சோதனை ஒன்று கோபிக்கு வர, மயூவா அல்லது மகள் இனியாவா? என்று முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இனியா கல்லூரி அசைன்மென்ட்டுக்காக கேரளா வரை தனியாக ட்ரிப் செல்ல உள்ளார். கோபி தான் இனியாவை கேரளா வரை அழைத்து செல்ல உள்ளார். இதற்காக இனியா பல ஆசைகளுடன் தயாராகி இருக்கும் நிலையில், ராதிகாவின் மகள் மயூ பெரிய மனுஷி ஆகிய விஷயத்தை ராதிகாவின் அம்மா கூற, ராதிகா உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார். இதற்கான ஃபங்ஷன் நாளைக்கே செய்து விடமால் என முடிவு செய்துள்ள ராதிகா, கோபியிடம் என்ன வேலை இருந்தாலும் நாளைக்கு எதையும் செய்யாதீங்க என கூறுகிறார்.
அடிச்சி தூக்கு.. வசூலில் வரலாற்று சாதனை படைத்த தலைவரின் ஜெயிலர்! அதிகார பூர்வமாக அறிவித்த சன் பிச்சர்ஸ்!
இதற்கு கோபி பதறியபடி, அய்யய்யோ நாளைக்கு இனியாவுடைய கேரளா ட்ரிப் இருக்கு என கூறுகிறார். இதை கூறியதும் டென்க்ஷனான ராதிகா நீங்க இல்லாம நாங்க ஃபங்ஷன் பண்ணனுமா என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.