TRP ரேட்டிங்கில் தாறுமாறு சாதனை செய்த கயல் சீரியல்..! கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்..!

First Published | Aug 24, 2023, 11:12 PM IST

ஒவ்வொரு வாரமும், ரசிகர்கள் எந்த சீரியலை அதிகம் பார்த்து ரசிக்கிறார்கள் என்பதை, டிஆர்பி அடிப்படையில் தான் கணித்து கூறுகிறார்கள். அந்த வகையில் இந்த வருடத்தின் 33 வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்த சீரியல்கள் குறித்து, இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

வழக்கம் போல் இந்த லிஸ்டில் 'கயல்' சீரியல் 12.87 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. வாராவாரம் இந்த சீரியலின் TRP எகிறி கொண்டே செல்லும் நிலையில், இந்த முறையும்... இதுவரை எந்த சீரியலும் பெற்றிராத TRP புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்க்கு காரணம், இடைவிடாமல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவது தான் என கூறப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் 10.53 புள்ளிகளுடன் 'எதிர்நீச்சல்' சீரியல் உள்ளது. கயல் சீரியலை விட, இந்த முறை மிகவும் குறைவான புள்ளிகளுடன் எதிர்நீச்சல், இரண்டாவது இடத்தில் உள்ளதால்... 'எதிர்நீச்சல்' சீரியலின் பரபரப்பு குறைந்து விட்டதா? என்கிற சந்தேகம் எழுகிறது. எனினும் இந்த வாரம், அப்பத்தா கண் முழித்துவிட்டதால் பல திருப்பங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

120 சர்வதேச விருதுகள் பெற்றாலும்... தேசிய விருது கிடைத்தது தான் பெருமை! நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி!

Tap to resize

மூன்றாவது இடத்தில், 10.34 புள்ளிகளுடன் சுந்தரி சீரியல் உள்ளது. கிட்ட தட்ட இந்த சீரியலில் இதுநாள் வரை மூடி மறைக்கப்பட்ட ரகசியங்கள் அனுவுக்கு தெரிந்து விட்டது. அதே போல், சுந்தரியும் கலெக்டராக ஆகி விட்டதால், இந்த வாரத்துடன் இந்த தொடர் முடிவுக்கு வந்துவிடும் என்றும், விரைவில் இந்த தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காவது இடத்தில் 9.92 புள்ளிகளுடன் 'வானத்தை போல' சீரியல் உள்ளது. ராஜ பாண்டியிடம் இருந்து துளசி பிரிந்து வாழ்வது ஒரு பக்கம் இருந்தாலும், துளசியை பழிவாங்க வெற்றியை தொடர்ந்து இப்போது ராஜ பாண்டியும் களமிறங்கி உள்ளார். எனவே இந்த சீரியல் ஓவ்வொரு நாளும், பரபரப்பான காட்சிகளுடன் நகர்ந்து வருகிறது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற முதல் நடிகர் அல்லு அர்ஜுன் தானாம்! கொண்டாடும் தெலுங்கு திரையுலகம்!

ஐந்தாவது இடத்தில் 9.16 புள்ளிகளுடன் 'இனியா' தொடர் உள்ளது. பாசமான அக்காவே இனியாவுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், அதற்க்கு இனியா பக்காவாக பதிலடியும் கொடுத்து வருகிறார். மாமியார் - மருமகள் சண்டையை பார்த்து சலித்து போன பலருக்கு மாமனார் - மருமகள் இடையே நடக்கும் காரசாரமான விவாதம் வேற லெவல். இது தான் இந்த சீரியல் குறுகிய நாட்களில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற காரணம் என கூறப்படுகிறது.

ஆறாவது இடத்தில் 8.84 புள்ளிகளுடன் சன்டிவி தொலைக்காட்சியில் ஷபானா நடித்து வரும் மிஸ்டர் மனைவி தொடர் உள்ளது. காதல், செண்டிமெண்ட் என மிகவும் புதுமையான கான்செப்டில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரை இல்ல தரசிகள் மட்டும் இன்றி பல இளம் ரசிகர்களும் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா! இன்ஸ்டா பதிவால் எழுந்த சந்தேகம்.. வைரலாகும் புகைப்படம்!

டாப் 5 லிஸ்டில் இடம்பிடித்து வந்த பாக்கிய லட்சுமி தொடர்... இப்போது 7.39 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாக்கியா காலேஜ் போக துவங்கியதில் இருந்து, கோபியுடன் சண்டை போட நேரம் கிடைக்காததே இந்த ட்ரா பேக்குக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

எட்டாவது இடத்தில், 7.14 புள்ளிகளுடன் 'ஆனந்த ராகம்' சீரியல் உள்ளது. இந்த சீரியலில் அழகுக்கும் - ஈஸ்வரிக்கும் திருமணம் ஆகியுள்ள நிலையில், ரொமான்ஸ் கலை கட்டி வருவதால்... இந்த தொடர் மேலும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்னாங்க! நடிகை விஜயலட்சுமி பகிர்ந்த பகீர் தகவல்!

மெல்ல மெல்ல, TRP-யில் ஏறுமுகத்தை சந்தித்து வந்த சிறகடிக்க ஆசை சீரியல்,  இந்த முறை 7.12 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதே போல் இந்த சீரியலில் மீனா - முத்துவுக்கு இடையே ரொமான்டிக் காட்சிகளும் களைகட்ட துவங்கி விட்டது.
 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 6.78 புள்ளிகளுடன் இந்த வாரம் 10-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவழியாக அண்ணன் - தம்பிகள் சொந்த வீடு கட்டி ஒன்றாக குடியேறி விட்டதால், விரைவில் இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பதாவ காணுமா? செய்யுறதையும் செஞ்சிட்டு ஓவர் சவுண்டு விட்ட குணசேகரன்! ஜனனியிடம் சிக்கிய தரமான சம்பவம்!

Latest Videos

click me!