இந்தாம்மா ஏய்... எதிர்நீச்சல் சீரியலில் குடும்ப குத்து விளக்காக வலம் வரும் கனிகாவின் கவர்ச்சி அலப்பறைகள்

First Published | Aug 22, 2023, 11:13 PM IST

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனின் மனைவியாக நடித்து வரும் நடிகை கனிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Actress Kaniha

சுசி கணேசன் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் கனிகா. அப்படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்த கனிகாவுக்கு அடுத்தடுத்து தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பட வாய்ப்பு கிடைத்தது.

Serial actress Kaniha

இதையடுத்து சேரனுடன் ஆட்டோகிராப் படத்தில் நடித்த கனிகாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் வரலாறு தான். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார் கனிகா. இப்படத்திற்காக அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் கிடைத்தது.


Ethirneechal Kaniha

வரலாறு படத்துக்கு பின்னர் மலையாள திரையுலகில் அறிமுகமான கனிகா, அங்கு நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால், கோலிவுட்டை டீலில் விட்டுவிட்டு கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார். அங்கு அடுத்தடுத்து மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பேமஸ் ஆனார்.

Kaniha photos

இவர் நடிகையாக மட்டுமின்றி டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றி இருக்கிறார். சச்சின் படத்தில் ஜெனிலியா, அந்நியன் நடிகை சதா மற்றும் சிவாஜி படத்திற்காக ஸ்ரேயா ஆகியோருக்கு கனிகா தான் டப்பிங் கொடுத்தார். இதுதவிர பைவ் ஸ்டார் படத்தில் இடம்பெற்ற எங்களுக்கு என்கிற பாடலை பாடியதும் கனிகா தான்.

இதையும் படியுங்கள்... காத்துவாங்கும் விடாமுயற்சி... களைகட்டும் லியோ! தயாரிப்பாளர் வெளியிட்ட அடுக்கடுக்கான அப்டேட் இதோ

Kaniha hot photos

சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி உள்ள கனிகா, கலக்கப் போவது யாரு, மெகா தங்கவேட்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். நடிகை கனிகாவுக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் ஷியாம் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

Kaniha, marimuthu

வரலாறு படத்துக்கு பின்னர் தமிழ்நாடு பக்கம் தலைகாட்டாமல் இருந்த கனிகாவை, அலேக்காக தூக்கி வந்த இயக்குனர் திருச்செல்வம், தன்னுடைய எதிர்நீச்சல் தொடர் மூலம் அவருக்கு கம்பேக் கொடுத்துள்ளார். எதிர்நீச்சல் தொடரின் முக்கிய கதாபாத்திரமான ஆதி குணசேகரனின் மனைவியாக நடித்து வருகிறார் கனிகா.

Ethirneechal serial actress Kaniha

எதிர்நீச்சல் தொடரில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, ஒரு குடும்ப பெண்ணாகவும் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகா, ரியல் லைஃபில் அப்படியே உல்டாவாக இருக்கிறார். மாடர்ன் உடையில் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை போட்டு இன்ஸ்டாகிராமையே கலங்கடித்து வருகிறார்.

Kaniha glamour photos

இதைப்பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் ஈஸ்வரியா இது என ஷாக் ஆகிப்போய் உள்ளனர். ஒருசிலரோ குணசேகரன் பாணியில், இந்தாம்மா ஏய் இது உன் புருஷனுக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது என கமெண்ட் போட்டு கிண்டலடித்து வருகின்றன. நடிகை கனிகாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

இதையும் படியுங்கள்... தனுஷ், லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அணியும் கருங்காலி மாலைக்கு இவ்வளவு பவரா?

Latest Videos

click me!