சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலில் எழிலின் திருமணம் குறித்த எபிசோட், சுமார் 15 நாட்களுக்கு மேல் ஜவ்வு போல் இழுத்த நிலையில், கயலை திருமணம் செய்து கொள்வார் எழில் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ஆனந்த் ஆர்த்திக்கு தாலி கட்டி அதிர்ச்சி கொடுத்தார்.
எனவே தற்காலிகமாக எழில் - கயல் திருமணம் இப்போது நடக்காது என்பது உறுதியானாலும்... கயலின் கழுத்தை அடுத்தடுத்த சில பிரச்சனைகள் நெறிக்க துவங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தற்போது கயலின் தங்கை ஆனந்தி, எழிலின் தம்பியை கொலை செய்துவிட்டார். இதை மறைப்பதற்காக, இருவரும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். எனினும் இருவரும் இதில் இருந்து தப்பிப்பார்களா? அல்லது வேறு ஏதேனும் திருப்பம் ஏற்படுமா என்பது சீரியல் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
ஜகஜால கில்லாடி! ஒருமுறை... இரண்டு முறை அல்ல! 4 முறை பெயரை மாற்றிய 'ஜெயிலர்' பட ரஜினி மருமகள் மிர்ணா!
ஒருவழியாக ஆர்த்தியின் திருமணம் நடந்து முடிந்து விட்ட நிலையில், இந்த திருமணத்தில் தர்மலிக்கத்துக்கு துளியும் விருப்பம் இல்லை. அதே போல் எழிலின் அம்மா சங்கரியும் மகன் மீது கடும் கோபத்தில் உள்ளார். நேற்று கணவரின் கழுத்தை நெரித்து, கொலை செய்ய துணிந்தது எல்லாம் வேற லெவல் என நினைக்க தோன்றியது.