விஜய் டிவியை காப்பி அடிக்கிறதா சன் டிவி? விரைவில் முடிவுக்கு வரும் சீரியலின் சீசன் 2 பணிகள் மும்முரம்!

First Published | Aug 22, 2023, 4:17 PM IST

விஜய் டிவி பாணியில், தற்போது சன் டிவியும் சூப்பர் ஹிட் தொடர் ஒன்றின் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

சன் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் சுந்தரி. இந்த சீரியலை இயக்குனர் அழகர் இயக்கி வருகிறார்.

சுந்தரி சீரியலில் கதாநாயகியாக கேப்ரியல்லா செலஸ் நடிக்க,  ஜிஷ்ணு மேனன் ஹீரோவாக நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக ஸ்ரீகோபிகா நீலநாத் நடித்து வருகிறார். சுமார் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், விரைவில் முடிவுக்கு வர உள்ளது.

கதறி அழும் நந்தினி ! குணசேகரனுக்கு எதிராக திரும்பிய கதிர்.. செம்ம ட்விஸ்ட்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!

Tap to resize

ஒரு கிராமத்தில் பிறந்து வளரும் அப்பா இல்லாத பெண்ணான சுந்தரி, சிறு வயதில் இருந்தே ஐஏஎஸ் படித்து கலெக்டராக வேண்டும் என ஆசைப்படுகிறார். மேலும் இவர் கருப்பாக இருக்கும் ஒரே காரணத்திற்காக பலரால் கேலி - கிண்டலுக்கும் ஆளாக்க படுகிறார்.

விதியின் விளையாட்டால் சுந்தரி தன்னுடைய உறவினரான கார்த்தி என்பவரை திருமணம் செய்ய நேர்கிறது. கார்த்தி ஏற்கனவே அனு என்பவரை காதலித்து வரும் நிலையில், திருமணத்திற்கு முன்பு வரை அனு கார்த்தியின் காதலை ஏற்காத நிலையில், கார்த்திக்கு திருமணமான பின்னர்... அவர் மீதான காதலை கூறுகிறார். எனவே தனக்கு திருமணம் நடந்த விஷயத்தை மறைத்து அனுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார் கார்த்திக்

இந்த ஹிட் படத்தில் கார்த்திக்கு முன் நடிக்க வேண்டியது நான் தான்! 13 வருடத்திற்கு பின் விஷ்ணு விஷால் பீலிங்!
 

இந்த விஷயத்தை சுந்தரிக்கும், தன்னுடைய வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் மறைக்கும் கார்த்திக் கார்த்திக்கின் பொய்... பித்தலாட்டம் எல்லாம் மெல்ல மெல்ல வெளியே வருகிறது. இறுதியாக அனுவுக்கு இந்த விஷயம் தெரிய வந்ததால், தற்போது அனு மிகவும் கோபமாக,  தன்னையும் தன்னுடைய குழந்தையையும் தேடி யாரும் வரக்கூடாது. என ஆவேசமாக பேசி விட்டு சுந்தரி வீட்டில் இருந்து செல்கிறார்.

விஜியால் தான் அனுவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது என்பதை அறியாத கார்த்திக், சுந்தரியை பார்த்து உன்னால் தான் என்னுடைய அனு, என்னை விட்டு போய் விட்டார் என அவரை தாக்க வரும் போது, கார்த்தியின் மாமா, சுந்தரிக்காக கார்த்தியை அடிக்கிறார். எனவே இனி என்ன நடக்கும் என்பதும் சீரியல் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது.

அடேங்கப்பா.. TRP-யை குறிவைத்து பிக்பாஸ் போட்ட மாஸ்டர் பிளான்! BB-சீசன் 7 நிகழ்ச்சியில் களமிறங்கும் 4 ஹீரோயின்!

sundari

இது ஒரு புறம் இருக்க, சுந்தரி ஆசைப்பட்டது போல் தற்போது ஐஏஎஸ் தேர்வில் பாஸ் செய்து கலெக்டராக ஆகப் போகிறார். அதே போல் கார்த்தியின் உண்மையும் அனுவுக்கு தெரிந்து விட்டதால், தற்போது இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து டிஆர்பிஎல் டாப் 3 இடத்தை இடம் பிடித்து வந்த சுந்தரி சீரியலுக்கு, தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளதால்... இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தை எடுக்க சன் டிவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர், சன் டிவியில் சீசன் 2 என்கிற கான்செப்ட் பயன்படுத்தாத நிலையில், விஜய் டிவியை காப்பி அடிக்கும் விதமாக தற்போது, சன் டிவி  சுந்தரி சீரியலின் சீசன் 2 தொடர் உருவாக்கி வருவதாகவ நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

விஜய் மகனுக்கு ஹீரோயின் ரெடி..! 18 வயது பருவ பெண்ணாக வளர்ந்து நிற்கும் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா! போட்டோஸ்!

Latest Videos

click me!