அடேங்கப்பா.. TRP-யை குறிவைத்து பிக்பாஸ் போட்ட மாஸ்டர் பிளான்! BB-சீசன் 7 நிகழ்ச்சியில் களமிறங்கும் 4 ஹீரோயின்!

First Published | Aug 21, 2023, 9:34 PM IST

'பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியில் நான்கு சீரியல் ஹீரோயின்களை களமிறக்க, விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
 

'பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சி, அடுத்த மாதம்.. முதல் வாரத்தில் இருந்து துவங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக, சமீபத்தில் பிக்பாஸ் முதல் டீசரை விஜய் டிவி வெளியிட்டது. இதில் உலக நாயகன் கமலஹாசன் மௌன சிரிப்புடன்... விரைவில் காண தயாராகுங்கள் என சைகை மூலம் காட்டி இருந்தார். மேலும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான புதிய லோகோவும் வெளியானது.

பிக்பாஸ் சீசன் செவன் ப்ரோமோ வெளியாகி உள்ளதால், இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கும் பிக்பாஸ் ரசிகர்கள் தயாராகி உள்ளனர். மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக, அவ்வப்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றிய சில அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.

பிரபல தமிழக கிரிக்கெட் வீரரை கரம் பிடித்த நடிகரின் மகள்! பிரமாண்டமாக நடந்து முடிந்தது திருமணம்!
 

Tap to resize

முந்தைய 6 சீசன்களை விட, 7-ஆவது சீசனை மிகவும் விறுவிறுப்பாகவும், வித்தியாசமாகவும், நடத்த பிக்பாஸ் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடு தயாராகி உள்ளதாம். அதே போல் யாரும் எதிர்பாராத விதமாகம். முந்தய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சில சர்ச்சை போட்டியாளர்கள், இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல்களும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது. அதன்படி, பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், கோவை முதல் பெண் பஸ் ஓட்டுனரான ஷர்மிளா, நடிகர் பப்லு என்கிற பிரித்விராஜ், சர்ச்சைநாயகி ரேகா நாயர், ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

'டாடா' பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் விஜய் டிவி சீரியல் ஜோடியின் மகள்! யார் தெரியுமா?

இவர்களை தவிர பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நான்கு ஹீரோயின்களை களம் இறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம். அதன்படி பிரபல தொகுப்பாளியும், சீரியல் நடிகையுமான ஜாக்குலின், பாரதி கண்ணம்மா ஃபரினா, ராஜா ராணி சீரியல் பிரபலமான விஜே அர்ச்சனா, மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நட்சத்திரா  ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இது போன்ற உத்தேச பட்டியல் அவ்வபோது வெளியாகி வந்தாலும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள தொகுப்பாளர் கமல்ஹாசனை விட மற்ற எந்த ஒரு பிரபலமும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்பது உறுதியாகவில்லை. எனவே யார் யார் கலந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடைத்து வைக்கப்பட்ட அப்பத்தா! கலங்கி நிற்கும் ஜீவானந்தத்தை பார்த்து ஜனனி கூறிய வார்த்தை! எதிர்நீச்சல் அப்டேட்

Latest Videos

click me!