'எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து அதிரடியாக தூக்கப்பட்ட கதாபாத்திரம்! யார் தெரியுமா?

First Published | Aug 19, 2023, 11:30 AM IST

'எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து அதிரடியாக முக்கிய கதாபாத்திரம் ஒன்றை சீரியல் குழு நீக்கி விட்டதாக வெளியாகி உள்ள தகவல், ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 

இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்கள் தைரியமாக போராட வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.  

படித்த பெண்களை ஆதி குணசேகரன் திருமணம் கொண்டு கொண்டு, அவரை வீட்டு வேலைகள் செய்யச் சொல்லி நான்கு சுவற்றுக்குள் அடைத்தது மட்டுமின்றி... தன்னுடைய தம்பிகளுக்கும், நன்கு படித்த பெண்களை திருமணம் செய்து வைத்து, அவர்களையும் கஷ்டப்படுத்துகிறார்.  இப்படி தன்னுடைய மூன்றாவது தம்பியான சக்திக்கு ஜனனி என்கிற பெண்ணை திருமணம் செய்து வைக்க, குணசேகரனுக்கு எதிராக ஜனனி எப்படி போராடி அதில் வெற்றி பெறுகிறார்? என்கிற விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியல்.

உருகி உருகி காதலித்த அமீர் - பாவனி பிரேக் அப் செய்துவிட்டார்களா? சர்ச்சை பதிவுக்கு பின் உண்மையை உடைத்த நடிகை!

Tap to resize

ஒவ்வொரு வாரமும், டிஆர்பி-யில் மற்ற சீரியல்களுக்கு டப் கொடுத்து வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து, தற்போது முக்கிய பிரபலம் ஒருவர் அதிரடியாக வெளியேறியுள்ளது மட்டுமின்றி, அவரின் கதாபாத்திரம் இனி சீரியலில் இடம்பெறாது என கூறப்படுகிறது.

கதாநாயகி ஜனனியின் மாமன் மகளாக வாசுகி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வைஷ்ணவி.துறுதுறுப்பான மற்றும் தைரியமான பெண்ணாக இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை கவர்ந்தது. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதுவசந்தம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால், எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. 

Throw Back: முழுமையான உடலுறவு இப்படித்தான் இருக்க வேண்டும்..! நடிகை கஜோல் கூறிய அந்தரங்க சீக்ரெட்!

மேலும் தற்போது 'எதிர்நீச்சல்' சீரியல் சென்று கொண்டிருக்கும் கதைக்களத்திற்கு இவருடைய கதாக பாத்திரம் பயன்படாத காரணத்தால், இவரை சீரியலில் இருந்து ஒரேடியாக நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி வைஷ்ணவி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!