ஜீவானந்தம் யார்.. உனக்கு என்ன உறவு..? டார்ச்சர் செய்த குணசேகரனுக்கு ஷாக் கொடுத்த அப்பத்தாவின் பதில்!

First Published | Aug 19, 2023, 9:42 AM IST

எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின், இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது.
 

குணசேகரனால் ஏமாற்றம் அடைந்த விரக்தியில் அப்பத்தா கோமாவுக்கு சென்ற நிலையில், ஒரு வழியாக அவரை காப்பாற்றி ஜனனி மருத்துவமனையில் அனுமதித்தார். இதைத்தொடர்ந்து அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்கள் முழுமையாக தன்னுடைய பெயருக்கு மாற்றப்படவில்லை என்பதை அறிந்து குணசேகரன், அப்பதாவை வீட்டில் தங்க வைத்து அவருக்கு சிகிச்சை செய்தார். ஆனால் குணசேகரனுக்கே தெரியாமல் அப்பத்தாவின் சொத்துக்களை ஆட்டையை போட்டார் ஜீவானந்தம்.

யார் இந்த ஜீவானந்தம் என்பது பதில் தெரியாத கேள்வியாக இருந்து வந்த நிலையில், பின்னர் ஈஸ்வரியின் முன்னாள் காதலர்தான்... இந்த ஜீவானந்தம் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அப்பதாவுக்கும் ஜீவானந்தத்திற்கும் என்ன உறவு? என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. இதற்கான பதிலை எதிர்நீச்சல் தொடரை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் மட்டுமின்றி, சீரியலில் நடித்து வரும் பிரபலங்களும் தேடிக் கொண்டுதான் உள்ளனர்.

Throw Back: முழுமையான உடலுறவு இப்படித்தான் இருக்க வேண்டும்..! நடிகை கஜோல் கூறிய அந்தரங்க சீக்ரெட்!

Tap to resize

இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தற்போது ஜனனி ஜீவானந்தத்தை தேடி அவருடைய வீட்டிற்கு செல்கிறார். அதை போல் மற்றொருபுறம் குணசேகரன் தன்னுடைய தம்பி கதிர், முன்னாள் போலீஸ் அதிகாரியான வளவன், மற்றும் சில அடியார்களை அனுப்பி ஜீவானந்தத்தை கொலை செய்ய கூறியுள்ளார். ஜீவானந்தத்தின் வீட்டை குணசேகரின் ஆட்கள் தற்போது சுற்றி வளைத்துள்ள நிலையில், அடுத்தடுத்து என்ன நடக்கும்? என்பது இன்றைய எபிசோட் மூலம் தெரியவரும்.

அப்பத்தா கண் முழித்ததில் இருந்து, சொத்துக்காக அவரைப் பேசவிடாமல்... தனது இரண்டு நாட்களாக திட்டிக் கொண்டே இருக்கிறார் குணசேகரன். அப்பத்தாவும் தனக்கு எதுவும் நினைவுக்கு இல்லாதது போல் அமர்ந்திருந்த நிலையில், தற்போது குணசேகரன் அப்பத்தாவிடம் அந்த ஜீவானந்தம் யார்? அவருக்கு உனக்கும் என்ன சம்பந்தம்? என கேட்க...  ஒரு நிமிடம் யோசித்து விட்டு, அப்பத்தா ஜீவானந்தம் செய்தது எல்லாம் எனக்காகத் தான் என கூறி அதிர்ச்சி கொடுக்கிறார். 

என் மகன் பொம்பள பித்தனாக, போதை - உடலுறவுக்கு அடிமையாக இருக்கணும்! விபரீதத்தில் முடிந்த பிரபல நடிகரின் ஆசை!

இவரின் பதில் குணசேகரனை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வெளியில் நடப்பது எதுவும் தெரியாமல், ஜீவானந்தம் நிம்மதியாக தன்னுடைய குழந்தை வெண்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்று எதிர்நீச்சல் சீரியலில் எப்படிப்பட்ட சம்பவங்கள் அரங்கேற போகிறது? அதனை ஜனனி - ஜீவானந்தத்துக்கு துணையாக இருந்து  தடுப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Latest Videos

click me!