விஜய் டிவியில் இருந்து வெளியேறியதற்கு அந்த பிரச்சனை தான் காரணம் - உண்மையை போட்டுடைத்த டிடி

First Published | Aug 18, 2023, 2:02 PM IST

பிரபல தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்ய தர்ஷினி, விஜய் டிவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

divya dharshini

சிறுவயதில் இருந்தே விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் திவ்ய தர்ஷினி. ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைப்பார்கள். இதனால் அதுவே அவரது அடையாளமாகவும் மாறியது. பேவரைட் விஜய் டிவி நிகழ்ச்சிகளான பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், காஃபி வித் டிடி, எங்கிட்ட மோதாதே, ஸ்பீடு என ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

divya dharshini

இன்று முன்னணி தொகுப்பாளர்களாக இருக்கும் பலரும் டிடி ஒரு ரோல் மாடல் என சொல்லும் அளவுக்கு இவர் ஹோஸ்ட்டிங் ஸ்டைலை இன்றளவும் யாராலும் கடைபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு நேர்த்தியான ஒரு தொகுப்பாளராக இருந்து வந்த டிடி-க்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் ஆனது. ஸ்ரீகாந்த் என்கிற தன்னுடைய நண்பனையே காதலித்து திருமணம் செய்துகொண்ட டிடி கருத்து வேறுபாடு காரணமாக மூன்றே ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

இதையும் படியுங்கள்... அக்கட தேசத்திலும் அடித்து நொறுக்கும் ஜெயிலர்... ரஜினி படத்தால் வாஷ் அவுட் ஆன சிரஞ்சீவியின் வேதாளம் ரீமேக்


divya dharshini

விவாகரத்துக்கு பின்னர் டிடி-யை பெரியளவில் விஜய் டிவி-யில் பார்க்க முடியவில்லை. அவ்வப்போது சில நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வந்த இவர், ஒருகட்டத்தில் விஜய் டிவியை விட்டே விலகிவிட்டார். அவர் விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் அதுதுகுறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசி உள்ளார் டிடி.

divya dharshini

அவர் கூறியதாவது : “விஜய் டிவியில் நான் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இல்லை என சொல்லும் அளவிற்கு ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளேன். ரியாலிட்டி ஷோ ஷூட்டிங் என்றாலே பல மணிநேரம் நடக்கும். அதனால் நிறைய நேரம் தொகுப்பாளர்கள் நிற்க வேண்டிய நிலை இருக்கும். ஒருகட்டத்தில் எனக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டு மணிக்கணக்கில் நிற்க முடியாத சூழல் உருவானது. இதனால் எனக்கு வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. பின்னர் தான் நான் விஜய் டிவியை விட்டு விலகிவிட்டேன் என கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்த படம்... மொட்டை தலையுடன் மாஸ் லுக்கிற்கு மாறிய விக்ரம் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

Latest Videos

click me!