இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில், ஆணாதிக்கத்துக்கு எதிராக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்கள் தற்போது ஜீவானந்தத்தின் கைக்கு போய்விட்டதை அறிந்த குணசேகரன், அவர் மீது கொலை வெறியில் இருக்கிறார். பல வழிகளில் ஜீவானந்தத்திடம் இருந்து சொத்துக்களை மீட்க குணசேகரன் முயற்சி செய்த நிலையில்... அனைத்திலும் தோல்வியே மிஞ்சியது.