சில சீரியல்கள் டாப் 10 TRP லிஸ்டில் இடம் பிடிக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றி பல ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அம்மா - பிள்ளைகள் பாசப்பிணைப்பில், நேர்மையோடு வாழ வேண்டும் என நினைக்கும் தமிழுக்கு எதிராக பல்வேறு சதி நடக்கிறது. இதனை இப்படி தமிழ் தன்னுடைய மனைவி சரஸ்வதியுடன் சேர்ந்து முறியடிக்கிறார் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல்.