பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் பிரபல செய்தி வாசிப்பாளர்! யார் தெரியுமா?

First Published | Aug 15, 2023, 8:37 PM IST

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அனிதா சம்பத்தை தொடர்ந்து, மற்றொரு தமிழ் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அவ்வப்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய, உத்தேச பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில்  தற்போது செய்தி வாசிப்பாளர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
 

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே, உலக அளவில் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டால், மற்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்களின் டிஆர்பி பலத்த அடி வாங்கும் என்கிற பயம், மற்ற சேனல்களுக்கு அதிகமாகவே உண்டு. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக சில நிகழ்ச்சிகளை அவர்கள் களமிறக்கினாலும் அதையும் பீட் செய்து ஒவ்வொரு முறையும் தன்னுடைய வெற்றியை தக்க வைத்து வருகிறது பிக்பாஸ்.

சுதந்திர தின ஸ்பெஷலா.. லுங்கியை இழுத்து சொருகியது போன்ற கவர்ச்சி உடையில் அதகளம் பண்ணும் சமந்தா! ஹாட் கிளிக்ஸ்
 


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்க முக்கிய காரணம் உலகநாயகன் கமலஹாசன் என்றும் கூறலாம். மக்கள் பிரதிநிதியாக மேடையில் நின்று, மக்கள் போட்டியாளர்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை நாசுக்காக கேட்பது மட்டுமின்றி....  வார்த்தைகளாலேயே வெளுத்து வாங்குவார்.  அதே போல் போட்டியாளர்கள் செய்யும் நற்செயல்களையும், எப்போதும் பாராட்ட மறந்ததில்லை.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் 100 நாட்கள் எவ்விதமான வெளியுலக தொடர்பும் இல்லாமல் குடும்பத்தினரை பார்க்காமல் இருக்க வேண்டும், அதுமட்டுமின்றி பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்குகளையும்  நேர்த்தியாக செய்து, மக்கள் மனதிலும், போட்டியாளர்கள் மனதிலும் இடம் பிடிக்க வேண்டும். இப்படி கடைசி வரை தாக்குப் பிடிப்பவர்கள் பிக்பாஸ் பின்னாலே வரை சென்றாலும் டைட்டில் வின்னர் யார் என்பதை தேர்தெடுப்பது மக்கள் தான்.

சுதந்திர தினத்தில் இரண்டாவது படத்தை உறுதி செய்த லெஜெண்ட் சரவணன்! வைரலாகும் செலபிரேஷன் வீடியோ!
 

கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யாரும் எதிர்பாராத விதமாக அசீம் டைட்டில் வின்னராக மாறிய நிலையில், விரைவில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியும் துவங்க உள்ளது. மேலும் இந்த முறை போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது என, பிரபலங்களின் உத்தேச பட்டியல் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், தற்போது செய்தி வாசிப்பாளர் ஒருவரின் பெயர் இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
 

'பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர்தான்' என கனத்த குரலில் பேசி, தன்னுடைய குரல் மூலம் மிகவும் பிரபலமான பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் கலந்து கொண்ட நிலையில் அவரை தொடர்ந்து, ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளாராம். ஒருவேளை இவர் போட்டியாளராக உள்ளே வந்தால், ரசிகர்கள் எப்படிப்பட்ட வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Jailer OTT: வசூலில் மிரட்டி வரும் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? கசிந்தது தகவல்!

Latest Videos

click me!