தயாராக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7 ப்ரோமோ..! எப்போது ரிலீஸ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

First Published | Aug 12, 2023, 10:16 AM IST

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ப்ரோமோ எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
 

இந்தியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழிகளில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் துவங்கப்பட்டது. அந்த வகையில் தமிழில் 2017 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக துவங்கியது.
 

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 சீசங்களாக உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், 7வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் எந்தவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், மக்களின் ஆதரவோடு பிரபலங்கள் தங்களுடைய முன் பின் தெரியாத பிரபலங்களுடன் இந்த வீட்டில் எந்த விதமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்க்.

Jailer Box Office: இரண்டாவது நாளில் மளமளவென சரிந்த 'ஜெயிலர்' வசூல்..! இருந்தும் அடித்து நொறுக்கிய சாதனை..!

Tap to resize

இதைத் தொடர்ந்து பிக்பாஸ் பல்வேறு டாஸ்க்களை பிரபலங்களுக்கு தருவார், அதையும் அவர்கள் நேர்த்தியாக செய்ய வேண்டும். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், இதில் டைட்டில் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். விக்ரமன் இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றார்.
 

இதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாகவே பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. மேலும் சில வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பிக்பாஸ் சீசன் 7 போட்டிக்கான ஆடிஷனில் கலந்து கொண்டதாகவும் அவர்களுடைய பெயர் பட்டியலும் வெளியானது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கோவை பெண் டிரைவரான ஷர்மிளா, ரேகா நாயர், குக் வித் கோமாளி சரண், நடிகர் பப்லு பிருதிவிராஜ், நடன இயக்குனர் ஸ்ரீதர், ஆகியோர் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ச்சி நடிகர் வாசு விக்ரமின் தாயார் காலமானார்! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இது ஒரு புறம் இருக்க, இந்த மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஒரு சில காரணங்களால் அடுத்த மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், இதனை இந்த மாத இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. மேலும் பிக்பாஸ் ரசிகர்களும் சீசன் 7 நிகழ்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!