விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் இரண்டு முக்கிய சீரியல்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

First Published | Aug 11, 2023, 9:40 PM IST

விஜய் டிவியில் ரசிகர்களின் மனதை கவர்ந்த இரண்டு முக்கிய தொடர்கள் அடுத்தடுத்து முடிவடைய உள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

திரைப்படங்களை போலவே, சீரியல்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தில் துவங்கி... பிரபல நடிகை அனுஷ்கா வரை பலர் குறிப்பிட்ட சீரியல்களை விரும்பி பார்த்து வருவதாக கூறியுள்ளனர். சமீப காலமாக இளைஞர்களும் சீரியலை அதிகம் விரும்பி பார்த்து வருகிறார்கள். அதிலும் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த சீரியல்கள், விஜய் டிவியில் தான் அதிகம் ஒளிபரப்பாகிறது.
 

குடும்ப செண்டிமெண்ட்டை தாண்டி, இளம் ரசிகர்கள் ரசனைக்கு ஏற்றாப்போல் காதல், ரொமான்ஸ், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவைகளாக விஜய் டிவி தொடர்கள் உள்ளதே இதற்க்கு முக்கிய காரணம் என கூறலாம். 

ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு நெல்சனை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்! வைரலாகும் புகைப்படம்!
 

Tap to resize

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இரண்டு முக்கிய சீரியல்கள் விரைவில் முடிவுக்கு வர போகிறதாம். அதில் ஒன்று... ஓவ்வொரு வாரமும் TRP-யில் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து வரும் 'பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான்.

pandian store

முதலில் இந்த சீரியல் அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த போது  டாப் 5 TRP-யில் இடம்பிடித்தது. பின்னர் இந்த சீரியலின் கதை எங்கெங்கோ இழுத்து செல்லப்பட்டு... தற்போது தனத்தின் கேன்சர் டிரீட்மென்டில் வந்து நிற்கிறது. மேலும் பல்வேறு பிரச்சனைகளால் பிரிந்திருந்த அண்ணன் - தம்பிகளும் ஒன்று சேர்ந்து விட்டதால், விரைவில் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார்களாம் சீரியல் குழுவினர்.

திரையுலகில் 45 வருடங்களை நிறைவு செய்த ராதிகா! இடைவிடாத சாதனை.. கணவருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

அதே போல் விஜய் டிவி, ஒளிபரப்பாகி வரும் 'காற்றுக்கென்ன வேலி' சீரியலும் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. வெண்ணிலா வெற்றிகரமாக தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்து விட்ட நிலையில், சூர்யா வெண்ணிலாவை திருமணம் செய்த ரகசியம் இன்னும் சில தினங்களில் அனைவருக்கும் தெரிந்த பின்னர், இவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் வாழ்க்கையில் ஒன்று சேர போவதாகவும், இதன் பின்னர் இந்த சீரியலும் முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது,, இந்த சீரியலை விரும்பி பார்த்து வரும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Latest Videos

click me!