இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி அவருடைய அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, ஜீவானந்தம் தன்னுடைய பிஏ உடன் அங்கு வர, ஈஸ்வரியின் தந்தை ஜீவானந்தத்திடம் எதற்கு இங்கு வந்தீங்க என்னுடைய சொத்தையும் அபகரித்து செல்லவா? என சத்தம் போடுகிறார். பின்னர் ஜீவானந்தம் தந்தையிடம் சண்டை போடுவது போல் தெரியவே, ஈஸ்வரி அந்த இடத்திற்கு வர... மிகவும் காட்டமான வார்த்தைகளால் ஜீவனத்திடம் பேசுகிறார் ஈஸ்வரி. அப்போது ஜீவானந்தம் சட்டென உங்களிடம் தனியாக பேச வேண்டும் என கூற, ஆரம்பத்தில் ஈஸ்வரியின் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி ஈஸ்வரி ஜீவானந்தத்திடம் தனியாக சென்று பேசுகிறார்.