சின்ராசு வாழ்க்கை சந்தோஷமாக துவங்கிய நேரத்தில், துளசி கர்ப்பமாக இல்லை என்பது அனைவர்க்கும் தெரிய வருகிறது. இதை தொடர்ந்து துளசியின் கணவரான ராஜபாண்டியும், மாமனார் சங்கரபாண்டியும் துளசியை வெறுக்கும் நிலையில்... எப்படியும் துளசியை ராஜபாண்டியுடன் சேர்த்து வைக்க குடும்பமே போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் குழந்தையை துளசி தன்னுடைய அண்ணனுக்காக கலைத்து விட்டார் என நினைக்கும் ராஜபாண்டி எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் தன்னுடைய இஷ்டத்துக்கு வாயில் வந்ததெல்லாம் பேசி வருகிறார்.