உஷார்... கார் லோன் என்கிற பெயரின் வினோத மோசடி! காவல் ஆணையர் அலுவலகத்தில் சீரியல் நடிகை நிலானி பரபரப்பு புகார்!

First Published | Aug 10, 2023, 12:04 AM IST

சீரியல் நடிகை நிலானி, கார் லோன் என்கிற பெயரில் தன்னிடம் வினோத முறையில் பண மோசடி செய்யப்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
 

சீரியல் நடிகை நிலானி மகாபாரதம் சீரியல் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்தது பிரியசகி, சுந்தரகாண்டம், தென்றல், பைரவி, இதயத்தை திருடாதே, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த, தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனையின் போது துப்பாக்கியால் சுடப்பட்டதை கண்டித்து போலீஸ் சீருடையில் வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுப்பது போல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக இயங்கி வந்த நிலானி, காந்தி லலித்குமார் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, அவருடன் நெருங்கி பழகி வந்த நிலையில்... ஒரு கட்டத்தில் அவரை வேண்டாம் என இவர் நிராகரித்தால் காந்தி லலித் குமார் கே கே நகர் பகுதியில் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

என் திறமையை நான் நம்ப வேண்டும் என சொல்லிக்கொடுத்தவர்! இயக்குனர் 'சித்திக்' மறைவுக்கு சூர்யா வெளியிட்ட அறிக்கை!

Latest Videos


இதைத் தொடர்ந்து சில வருடங்கள் சீரியலில் அதிகம் தலை காட்டாமல் இருந்த, சச்சை நடிகையான நிலானி நீண்ட இடைவெளிக்கு பின்னர் சில சீரியல்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தன்னிடம் வினோதமான முறையில் கார் லோன் கொடுப்பதாக கூறி பண மோசடி செய்யப்பட்டது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது இவருக்கு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கார் லோன் வழங்குவதாக ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறியதை தொடர்ந்து நிலானி அது குறித்து முழு விவரங்களையும் கேட்டுள்ளார். இதற்கு ஆன்லைன் லிங்க் ஒன்றை கொடுத்து அதில் லாகின் செய்யுமாறு அந்த நபர் கூறியுள்ளார். இதில் நீங்கள் கேட்கும் அனைத்து விவரங்களும் இருக்கும் என தெரிவித்ததை தொடர்ந்து, அந்த நபர் கூறிய கொடுத்த லிங்கை லாகின் செய்து நிலானி பார்த்தபோது, அதில் வட்டி அதிகமாக காட்டியுள்ளது. எனவே கார் லோன் வேண்டாம் என நிலானி நிராகரித்துள்ளார்.

விஷால் செய்த துரோகம்..! மனசு நொந்து போய் அப்பாஸ் கூறிய அதிர்ச்சி தகவல்..!

nilani1

ஒரு மாதத்திற்கு பின்னர் நிலானிக்கு ரூபாய் 8.80 லட்சம் கிரெடிட் ஆகிவிட்டதாகவும், அதற்கு வட்டி தொகையாக 10,988 ரூபாய் என மெசேஜ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிலானி தனக்கு போன் செய்த அந்த நபரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் மிரட்டுவது போல் பேசியுள்ளார். நிலானி வங்கி கணக்கில் இருந்தும் பணம் டெபிட் செய்யப்பட்டுளள்து,  இதை தொடர்ந்து தான் காருக்கான லோன் வாங்காமலேயே தன்னிடம் இது போன்ற வினோதமான முறையில் மோசடி செய்ததை அறிந்த நிலானி, இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில் பணம் எடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் மற்றும் அதன் நபருடன் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் மிரட்டும் வகையில் பேசிய ஆடியோ பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

click me!