விஜய் டிவியில், உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஹிந்தியில் பிரபலமான பின்னரே இந்த நிகழ்ச்சி, தமிழ் மலையாளம், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் துவங்கப்பட்டது.
26
இந்த நிகழ்ச்சியில் மூலம், இதுவரை திரையில் மட்டுமே பார்த்து
ரசிக்கப்பட்ட பிரபலங்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என தெரிந்து கொள்ள முடிவதால் இந்த நிகழ்ச்சியை பல ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், இதில் டைட்டில் வின்னராக சீரியல் நடிகர் அசீம் மக்களால் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை, விக்ரமன் தட்டிச் சென்றார். இந்நிலையில் அடுத்த மாதம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளதாகவும், இதற்கான புரோமோஷன் ஷூட் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், இன்னும் ஓரிரு வாரத்தில் பிக்பாஸ் சீசன் 7 துவங்குவது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
46
மேலும் இதில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது யூகிப்பின் அடிப்படையில் வெளியாகி வருகிறது. ஏற்கனவே இந்த லிஸ்டில் நடிகை ரேகா நாயர், நடன இயக்குனர் ஸ்ரீதர், தொகுப்பாளர் ஜாக்குலின், உள்ளிட்ட சில பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் தற்போது கயல் சீரியல் நடிகை ஒருவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
கயல் சீரியலில் டாக்டர் கௌதமுக்கு உதவி செய்து கயலை பழிவாங்கும், வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அன்னபூரணி. இவர்தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
66
மதுரையில் பிறந்த அன்னபூரணி இதுவரை பாசமலர், சொந்த பந்தம், மோகினி, தேவதை, மரகத வீணை, வள்ளி, கல்யாண வீடு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மேலும் நடிகர் ஆர்யா நடித்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில்... கண் தெரியாத டீச்சர் வேடத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.