விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியல்..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!

First Published | Aug 8, 2023, 5:33 PM IST

பிரபல சன் டிவி தொடர் ஒன்று விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

சன் டிவி தொலைக்காட்சியில் ரசிகர்களின் ஆதரவோடு ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'சுந்தரி'. கிராமத்தில் பிறந்த பெண் ஒருவர்... தன்னுடைய கனவு படிப்பான IAS படிக்க பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே போராடி, IAS ஆகிறாளா? இல்லையா என்பது பற்றி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இயக்குனர் அழகர் இயக்கத்தில், கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில்... டிக் டாக் மூலம் பிரபலமான கேபிரியல்லா செலஸ் கதாநாயகியாகவும், ஜிஷ்ணு மேனன் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மற்றொரு நாயகியாக ஸ்ரீ கோபிகா நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், மனோகர் கிருஷ்ணா, இந்துமதி மணிகண்டன், சங்கீதா பாலன், ஜோதி, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

எதிர்நீச்சல் தொடரை காலி பண்ண சதி திட்டம்..?பலே பிளான் போட்டும் புஸ்ஸுன்னு போகிடுச்சாம்..!

Tap to resize

சுந்தரியை இஷ்டமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் கார்த்தி... பின்னர் அனு தன்னை காதலிப்பதை தெரிந்து கொண்டு அவரையும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொள்கிறார். ஒரு நிலையில் இந்த உண்மை சுந்தரிக்கு மட்டுமே தெரிந்த நிலையில்... தற்போது அனைவருக்குமே தெரிய வந்துள்ளது. ஆனால் அனுவுக்கு மட்டும் இந்த ரகசியம் தெரியவராத நிலையில்.. இன்னும் சில தினங்களில், அனுவுக்கு தெரியவரும் சூழல் உருவாகியுள்ளது.

அதே போல், சுந்தரியும் IAS படிப்பின் தேர்வை நல்லபடியாக எழுதி பாஸ் செய்துள்ளதால், விரைவில் அவர் மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி விரைவில் சுந்தரி தொடர் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அனுவுக்கு, கார்த்தி தான் சுந்தரியின் முதல் மனைவி என தெரியவந்தால், அனு என்ன முடிவெடுப்பார் என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. TRP-யில் டாப் 5 இடங்களை பிடித்து வரும், சுந்தரி சீரியல் முடிவடைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இந்த தொடரை விரும்பி பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கல்யாண கலை வந்துடுச்சே..! சேலையழகில் தமன்னா போட்ட புகைப்படத்திற்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்..! போட்டோஸ்..!

Latest Videos

click me!