சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடர் ஒவ்வொரு வாரமும் TRP-யில் கெத்து காட்டி வருகிறது. தன்னுடைய பெரியப்பா தர்மலிங்கத்தின் அனைத்து சதி திட்டங்களையும் முறியடித்து, தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வரும் கயல், திருமண வயதை எட்டிய போதிலும் தன்னுடைய குடும்பத்திற்காக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.
எழில் எப்படியும் கயலை தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற முடிவில் உள்ளதால்... கயலை தீர்த்து கட்ட வேண்டும் என அவருக்கு எதிராக திட்டங்கள் போடப்படுகிறது. கயலை கொலை செய்ய கடந்த வாரம் கெளதம் திட்டம் போட்ட நிலையில், தற்போது எழிலின் அம்மா... கயலை ரவுடிகளை வைத்து அடிக்க ஆட்களை செட்டப் பண்ணியுள்ளார். இது குறித்த ப்ரோமோ தான் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. திருமண மேடை வரை வந்த ஆர்த்தியின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் பட்சத்தில், அவருக்கும் அதே மேடையில் வேறு ஒருவருடன் திருமணம் நடக்குமாம். ஆர்த்தி எழிலின் உயிர் நண்பனான ஆனந்தை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.