இதுக்கு ஒரு எண்டே இல்லையா? ஜவ்வு போல் இழுத்து கொண்டு போகும் கயல் சீரியல்.. காண்டான ரசிகர்கள்..!

First Published | Aug 5, 2023, 8:45 PM IST

கயல் சீரியல் இன்றைய எபிசோடில் எப்படியும் எழில் - கயலுக்கு திருமணம் ஆகிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியதால் செம்ம காண்டாகி உள்ளனர் ரசிகர்கள்.
 

சன் டிவி தொலைக்காட்சியில் நடிகை சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'கயல்'. ஒவ்வொரு வாரமும் டி.ஆர்.பி-யில் எதிர்நீச்சலுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது. குறிப்பாக... கடந்த வாரம், இதுவரை எந்த சீரியலும் பெற்றிராத 12.48 TRP புள்ளிகளை பெற்று சாதனை படைத்தது. இதனை கயல் சீரியல் குழுவினரும் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், அந்த புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.

எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில்... இன்று வெளியான புரோமோவில், கயல் கழுத்தில் எழில் தாலி கட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. எனவே, ரசிகர்கள் எப்படியும் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் கல்யாண எபிசோட் இன்று முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்த்த நிலையில், இன்றைய தினமும் மிகப்பெரிய ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளது.

கயல் சீரியலில் எழில் திருமணம் யாருடன் நடந்தது தெரியுமா? செம்ம ட்விஸ்ட்... வைரலாகும் புகைப்படம்..!

Tap to resize

எழில் - கயல் கழுத்தில் தாலி கட்டுவது போல், கயலின் பெரியம்மா கனவு தான் கண்டுள்ளார். இதில் ஹை லைட் என்னவென்றால்... கயல் கழுத்தை நெறிப்பதாக நினைத்து கொண்டு, கயலில் பெரியப்பா கழுத்தை தூக்கத்தில் நெரித்து தான். தர்மலிங்கம் ஒரு அரை விட்ட பிறகுதான், பெரியம்மா தான் கண்டது கனவு என்றே உணர்ந்தார்.

இதை தொடர்ந்து, எழில் மீதுள்ள காதலை மறைத்து கொண்டு, அவருக்கு வாங்கிய கிஃப்ட் அனைத்தையும் எடுத்து கொண்டு, திருமணத்திற்கு கயல் கிளம்புகிறார். மற்றொரு புறம், எழில் கயலை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, கயலின் அம்மா காமாட்சி... தன்னுடைய கணவர் புகைப்படம் முன்பு மனம் உருகி வேண்ட, புகைப்படத்தில் இருந்து ரோஜா பூ கீழே விழுவதால்... ஏதோ தன் மகளுக்கு நல்லது நடக்க போவதை உணர்ந்த காமாட்சி இதுகுறித்து, மருமகளிடமும் கூறி சந்தோச படுகிறார்.

உடல்நல குறைவால் பிரபல நடிகர் கைலாஷ் நாத் காலமானார்!

ஆனந்தி, ஏற்கனவே திருமண மண்டபத்தில், கயல் உறவினரால் ஏற்பட்ட பிரச்னையை மனதில் வைத்து கொண்டு திருமணத்திற்கு வரவில்லை என கூற, அவருக்கு ஆறுதல் கூறி... திருமணத்திற்கு கிளம்ப வைக்கிறார் கயல். மற்றொரு புறம் எழிலின் திருமண ஏற்பாடுகள் அமோகமாக நடந்து வருகிறது. மேலும் தன்னுடைய குடும்பத்தினரை ஆட்டோவில் ஏற்றி விட்டுவிட்டு, கயல் தன்னுடைய வண்டியில் திருமணத்திற்க்கு புறப்படுகிறார்.

பத்திரமாக திருமணத்திற்கு கயல் செல்வாரா? அல்லது போகும் வழியில் கூட அவருக்கு ஏதேனும் புது பிரச்சனை கார்த்திருக்குமா? இன்றைய தினம் திருமண எபிசோட் ரசிகர்களை ஏமாற்றி இருந்தாலும்... அடுத்த வாரமாவது திருமணம் நடக்குமா? என பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரம் இந்த திருமண எபிசோடை ஜவ்வு மிட்டாய் போல் இழுத்து கொண்டே செல்வது ரசிகர்களையும் செம்ம காண்டாக்கி உள்ளது.

இதுவரை நடித்திராத மிரட்டலான கெட்டப்பில் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ரக்ஷிதா! வைரலாகும் வீடியோ!

Latest Videos

click me!