இன்றைய தினம் எழில் யாரை திருமணம் செய்து கொள்வார் என்பது தெரிந்துவிடும். இந்த பரபரப்பான காட்சிக்காக தான் ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாக காத்திருந்தனர் என்றும் கூறலாம்.நேற்றைய எபிசோடில்.. மணமகளான ஆர்த்தி, எழில் பக்கத்தில் மணக்கோலத்தில் வந்து அமர்கிறார். ஐயரும் மந்திரங்கள் ஓதி, அவர் கையில் தாலியை கொடுக்க... எழில் யார் கழுத்தில் அந்த தாலியை கட்ட போகிறார் என்கிற பரபரப்பான காட்சியக்கு முன்பே எபிசோட் முடிவடைந்தது.