விட்ட இடத்தை பிடித்த சுந்தரி... டி.ஆர்.பி-யில் டாப் 5 லிஸ்டில் இடம்பிடித்த சீரியல்கள்! என்னென்ன தெரியமா?

First Published | Aug 4, 2023, 7:21 PM IST

TRP  ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை கைப்பற்றிய, சீரியல்களின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
 

ஒவ்வொரு வாரமும் ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சீரியல் எது என்பது டிஆர்பி டேட்டிங் மூலம் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் 5 இடங்களை கைப்பற்றிய சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பின் மூலம் பார்க்கலாம்.
 

கயல்:

இந்த வாரம், வழக்கம் போல் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது 'கயல்' சீரியல். எழிலுக்கும் கயலுக்கும் திருமணம் நடக்குமா? என்கிற எதிர்பார்ப்போடு, 'கயல்' சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த தொடர் இதுவரை எந்த சீரியலும் பெற்றிடாத அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங்கான 12. 48 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

காட்டு ராணி இவளோ..! மாளவிகா மோகனன் பிறந்தநாளில் புதிய போஸ்டரை வெளியிட்ட 'தங்கலான்' படக்குழு!

Tap to resize

எதிர்நீச்சல்:

குணசேகரனுக்கே தண்ணி காட்டிவிட்டு, அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்களை ஜீவானந்தம் ஆட்டையை போட்ட நிலையில், ஜீவானந்தம் யார் என்கிற விசாரணையை ஒருபுறம் ஜனனியும் மற்றொருபுறம் குணசேகரனும் கண்டுபிடிக்க போராடி வருகிறார்கள். எதிர்பார்க்காத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 11.55 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சுந்தரி சீரியல்:

கடந்த சில வாரங்களாக சற்று டல்லடித்த சுந்தரி சீரியல், தற்போது மீண்டும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. கார்த்தியை பற்றிய உண்மை அனைவர்க்கும் தெரிந்து விட்டநிலையில்... விரைவில் கார்த்தி தான் சுந்தரியின் கணவர் என்பது அனுவுக்கு தெரிய வருமா? என்கிற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இந்த வாரம் 10.9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

பணம் நெருக்கடி... முன்னணி நடிகரிடமிருந்து 25 கோடி கடன் வாங்கினாரா சமந்தா?

வானத்தைப் போல:

அண்ணன் - தங்கைகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் 'வானத்தைப்போல' சீரியலில் துளசி கர்ப்பமாக இல்லை என்பதை தெரிந்ததும் அவரை முழுமையாக வெறுத்து வருகிறார் ராஜபாண்டி. எனினும் அவரை சமாதானப்படுத்த பலரும் முயற்சி செய்து வந்தாலும், தற்போது வரை துளசி மேல் உள்ள கோபத்தால் அவரை பிரிய முடிவு செய்துள்ள நிலையில்... துளசியின் கரு கலைய காரணம் யார் என்பது பற்றி தெரியவருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். 10.05 டிஆர்பி ரேட்டிங்குடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.
 

இனியா:

நடிகை ஆலியா மானசா மற்றும் ரிஷி நடித்து வரும் இனியா தொடர், சமீபத்தில் தான் சன் டிவியில் தொடங்கப்பட்டாலும், தற்போது டாப் 5 ரேட்டிங்கில் இடம் பிடிக்கும் அளவுக்கு வந்துவிட்டது. அந்த வகையில் இந்த வாரம் 9.78 டிஆர்பி ரேட்டியை கைப்பற்றி உள்ளது.

எதிர்நீச்சலை ஓரம்கட்டி கயல்..! டி.ஆர்.பி-யில் இதுவரை எந்த சீரியலும் செய்யாத சாதனை.. கேக் வெட்டி கொண்டாட்டம்!

suun tv, vijay tv serials

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவி தொடர்கள் ஒன்று கூட டிஆர்பி பட்டியலில் டாப் 5 லிஸ்டில் இடம்பெறவில்லை என்றாலும், டாப் 10 லிஸ்டில்... பாண்டியன் ஸ்டோர் 9 ஆவது இடத்திலும், சிறகடிக்க ஆசை எட்டாவது இடத்திலும், பாக்கியலட்சுமி ஏழாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது,
 

Latest Videos

click me!