எதிர்நீச்சலை ஓரம்கட்டி கயல்..! டி.ஆர்.பி-யில் இதுவரை எந்த சீரியலும் செய்யாத சாதனை.. கேக் வெட்டி கொண்டாட்டம்!

First Published | Aug 4, 2023, 3:32 PM IST

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடர் டி ஆர் பி-யில் அதிகமான ரேட்டிங் புள்ளிகளை பெற்று சாதனை செய்யுள்ளதை தொடர்ந்து, இதனை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலுக்கு, இல்லத்தரசிகள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தொடரில், 'கால்யாணம் முதல் காதல்வரை', 'யாரடி நீ மோகினி',  போன்ற சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சியமான நடிகை சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக, 'ராஜா ராணி' சீரியல் நடிகர் சஞ்சீவ் நடித்து வருகிறார்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்த கயல், ஏழ்மையான சூழ்நிலைகளுக்கு இடையே படித்து செவிலியர் ஆகி... தன்னுடைய குடும்பத்தை அழிக்க நினைக்கும் பெரியப்பாவுக்கு எதிராக... நன்றாக வாழ்ந்து காட்டுவது மட்டும் இன்றி, அண்ணன், தம்பி, தங்கையை கரை சேர்க்க போராடுகிறார் இதை மையமாக வைத்தே இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

ஜெயிலர் படத்திற்கு மோகன் லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாங்கிய சம்பளம்! எவ்வளவு தெரியுமா?

Tap to resize

அதே போல் கயலை சிறிய வயதில் இருந்தே எழில் காதலித்து வரும் நிலையில், கயல் அவரின் காதலை ஏற்றுக்கொள்ள  தொடர்ந்து மறுப்பு தெரிவித்தாலும், எழிலை மணமேடையில் வைத்து பார்க்கும் போது.. அவருக்கே தெரியாமல் எழில் மேல் வைத்திருக்கும் காதல் வெளிப்படுகிறது. அதே நேரம் கயலை கெளதம் கடத்தி கொலை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், கயலை எழில் காப்பாற்றி திருமணம் செய்து கொள்வாரா? என்கிற எதிர்பார்ப்புடன் இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

இன்றைய தினம் ஒருவழியாக எழில் யாரை திருமணம் செய்து கொள்வார் என்று தெரியவந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த வாரம் மட்டும் 'கயல்' சீரியல் இதுவரை எந்த சீரியலும், பெற்றிராத அதிகபட்ச டிஆர்பியாக 12.48 புள்ளிகளை பெற்றுள்ளது.

காசுக்காக இயக்குனர் பாலா மனைவியின் அபாஷன் நாடகம்! MP-யுடன் கள்ள உறவு.. புட்டு புட்ட வைத்த காயத்திரி தேவி!

ஏற்கனவே கடந்த மாதம் எதிர்நீச்சலில் ஆதிரையின் திருமண எபிசோட் 11.16 புள்ளிகளை பெற்றது தான் அதிக பக்கமாக பார்க்கப்பட்ட நிலையில் அதையே பின்னுக்கு தள்ளியுள்ளது கயல் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங். இதனை கயல் சீரியல் குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை சைத்ரா ரெட்டி இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் சீரியல் குழுவினருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!