திருமணமான ஒரே வருடத்தில்... பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் கணவர் அதிர்ச்சி மரணம்!

First Published | Aug 3, 2023, 5:17 PM IST

'பாரதி கண்ணம்மா' நடிகை ஸ்ருதி ஷண்முகபிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் திருமணமான ஒரே வருடத்தில் உயிரிழந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

சின்னத்திரையில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பிரபலங்களில் ஒருவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா. நாதஸ்வரம் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி அடுத்தடுத்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா, போன்ற பல தொடர்களில் நடித்தார்.

நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால், கல்லூரி படிக்கும் போதே சின்னத்திரையில் அறிமுகமான இவர், சில கோலிவுட் திரைப்படங்களிலும் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்ருதி ஷண்முகப்பிரியா, கடந்தாண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசை தட்டிச் சென்ற, அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

வசமாக சிக்கிய ஆதிரை..! குணசேகரனின் நண்பராக என்ட்ரி கொடுக்கும் கோலங்கள் பிரபலம்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!

Tap to resize

இவர்களின் திருமணம் இரு வீட்டு குடும்பத்தினரின் பிரமாண்ட ஏற்பாட்டுடன், பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்க ஆடம்பரமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு முன்பு ஸ்ருதி பாரதிகண்ணம்மா சீரியலில் ஹீரோவுக்கு அக்காவாக நடித்து வந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் அதிரடியாக சீரியலில் இருந்து விலகி, முழுக்க முழுக்க குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகி, ஒரு வருடமே ஆகும் நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரவிந்த் சேகருக்கு 30 வயதே ஆகும் நிலையில்... இவரின் இழப்புக்கு பலர் தங்களின் இரங்கல்களை தெரிவித்து, ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை எனக்கும் நடந்துருக்கு..! சீரியல் நடிகை லதா ராவ் ஓப்பன் டாக் !

Latest Videos

click me!