நடிகர் மாரிமுத்து மீது குவியும் புகார்கள்.... எதிர்நீச்சல் தொடருக்கு சிக்கல் வருமா?

First Published | Aug 3, 2023, 10:40 AM IST

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்துவுக்கு எதிராக ஜோதிடர்கள் கும்பலாக வந்து புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ethirneechal Marimuthu

சின்னத்திரை சீரியல்களில் தற்போது டிரெண்டிங்கில் உள்ள சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். திருச்செல்வன் இயக்கி வரும் இந்த சீரியல் டிஆர்பி-யிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த சீரியல் இந்த அளவு வரவேற்பை பெற்று வருவதற்கு முக்கிய காரணம் அதில் ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்து தான். சீரியலில் அவர் பேசும் வசனங்கள் மீம் டெம்பிளேட்டுகளாக மாறி சமூக வலைதளங்களில் கலக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிட்டார் மாரிமுத்து.

marimuthu

இதனிடையே சமீபத்தில் நடிகர் மாரிமுத்து விவாத நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் ஜோதிடர்கள் ஒருபக்கமும், ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் ஒரு பக்கம் என இரு தரப்பினர் இடையே விவாதம் நடைபெற்றது. இதில் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் சார்பாக பேச வந்திருந்த மாரிமுத்து, ஜோதிடர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் என்றும், நம் நாடு பின் தங்கி இருப்பதற்கு ஜோதிடர்கள் தான் காரணம் என சரமாரியாக சாடி இருந்தார்.

இதையும் படியுங்கள்... சுனாமி, கொரோனாலாம் வரும்னு ஏன் யாரும் முன்கூட்டியே சொல்லல? ஜோதிடர்களை கதிகலங்க வைத்த எதிர்நீச்சல் மாரிமுத்து

Tap to resize

Ethirneechal Marimuthu

மாரிமுத்து கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஜோதிடர்கள் விடைகொடுக்க முடியாமல் திணறியதையும் அந்நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. அதில் ஒரு சிலர், மாரிமுத்துவின் பேச்சைக் கேட்டு கொந்தளித்து அவருடன் சண்டையிட முயன்ற சம்பவமும் அரங்கேறியது. இப்படி பரபரப்பான விவாதமாக மாறிய அந்நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்கிற ஜோதிடர், அண்மையில் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். விளக்கம் அளிக்கவில்லை என்றால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இது ஒருபுறம் இருக்க, தற்போது நடிகர் மாரிமுத்து மீது திருச்செங்கோடு காவல்நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் புகார் அளித்துள்ளனர்.

புகாரளிக்க திரண்டு வந்த ஜோதிடர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் மகேந்திரன் உறுதி அளித்த பின்னரே அவர்கள் அங்கிருந்து களைந்து சென்றுள்ளனர். ஒருவேளை மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், எதிர்நீச்சல் தொடருக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்கிற கவலையில் சீரியல் குழுவினரும், ரசிகர்களும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... அக்கா, தங்கச்சியை கல்யாணம் பண்ணிய நவரச நாயகன்... தாய் - தந்தையின் பிரிவு பற்றி மனம்திறந்த கவுதம் கார்த்திக்

Latest Videos

click me!