1500 ரூபாயில் துவங்கி.. இன்று எதிர்நீச்சல் சீரியலுக்கு மட்டும் மாரிமுத்து வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published | Aug 1, 2023, 10:05 PM IST

எதிர்நீச்சல் சீரியல் மூலம், பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆகி உள்ள நடிகர் மாரிமுத்து.. ஆரம்பத்தில் 1500 ரூபாய் சம்பளத்தில் தன்னுடைய வாழ்க்கையை துவங்கி, தற்போது எதிர்நீச்சல் சீரியலுக்கு மட்டும் கோடிகளில் சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

Ethirneechal Marimuthu

திரை உலகில் சாதிக்க துடிக்கும் அனைவருமே எடுத்த எடுப்பில் தங்களின் வெற்றி இலக்கை அடைந்து விடுவதில்லை. இதற்கு மிகப் பெரிய உதாரணமாக பலர் உள்ளனர். ஆனால் அவர்களின் விடாமுயற்சி, உழைப்பு போன்றவை... என்றோ ஒருநாள் அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கும். அப்படி 33 வருட விடாமுயற்சிக்கு பின்னர், இன்று சின்னத்திரையிலும், வெள்ளித்திரையில் தனக்கென தனி அடையாளம் பதித்துள்ளார் மாரிமுத்து.
 

திரைப்பட இயக்குனராக வேண்டும் என, தன்னுடைய ஊரில் இருந்து புறப்பட்டு வந்த மாரிமுத்து ஆரம்பத்தில், பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. எப்படியோ அடித்து பிடித்து, பிரபல இயக்குனர்களான மணிரத்தினம், வசந்த், எஸ் ஜே சூர்யா, சீமான், போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்போது அவரின் சம்பளம் வெறும் ஆயிரத்து 1500 ரூபாய் தான்.

கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்.. விளைவு மிக மோசமாயிருக்கும்! நடிகர் ராஜ்கிரண் ஆவேச பதிவு!
 

Tap to resize

சிம்பு நடித்த சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'மன்மதன்' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார். இவர் துணை இயக்குனராகவும், இணை இயக்குனராகவும் பணிபுரிந்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் இயக்குனராக படம் இயக்கவும் தயாரானார். அந்த வகையில் நடிகர் பிரபுதேவாவை வைத்து தன்னுடைய முதல் படத்தை மாரிமுத்து இயக்கி வந்த நிலையில், ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு 10 நாட்களில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரசன்னாவை ஹீரோவாக வைத்து 'கண்ணும் கண்ணும்' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் வடிவேலுவின் கிணத்த காணும் காமெடி தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் படியான காமெடி காட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
 

இதைத்தொடர்ந்து வடிவேலுவை கதையின் நாயகனாக வைத்து மாரிமுத்து ஒரு படத்தை தொடங்கினார். 'கத்தி முனையில் கருப்பு சிங்காரம்' என பேரிடப்பட்ட இந்த படத்தின் தயாரிப்பாளர் வடிவேலு கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்ததால் படப்பிடிப்பு பேச்சுவார்த்தையோடு நின்றது. பின்னர் மல்டி ஸ்டார் படமாக புலிவால் என்கிற படத்தை பிரசன்னா - விமலை வைத்து இயக்கினார். இந்த படம் தோல்வியடைந்தாலும், இப்படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தன.

இதுவே முதல் முறை..! எந்த பாடலும் செய்திடாத சாதனையை 24 மணிநேரத்தில் நிகழ்த்திய 'ஜவான்' ஃபஸ்ட் சிங்கிள்!
 

இயக்குனராக தன்னால் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்ட முடியவில்லை என மன உளைச்சலில் இருந்த மாரிமுத்துவை, இயக்குனர் மிஷ்கின் அவர் இயக்கிய 'யுத்தம் செய்' படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்தடுத்து பரியேறும் பெருமாள், மருது, சுல்தான், கூட்டத்தில் ஒருவன், பைரவா, போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
 

ஆனால் வெள்ளித்திரையில் இவருக்கு கிடைக்காத பெயரையும், புகழையும், பிரபலத்தையும் பெற்று தந்தது என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். மிகவும் நேர்த்தியாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆதி குணசேகரன் என்கிற வில்லன் கேரக்டரில் இவர் நடித்தாலும்,  இவருக்கான தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. மேலும் இந்த சீரியலில் அதிக சம்பளம் வாங்குவதும் இவர்தான் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு மாதத்திற்கு மட்டும் இவருக்கு சம்பளமாக ஒன்றரை கோடி வரை சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 


அப்போ அதெல்லாம் சும்மாவா? நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் கவின்! மணமகள் பற்றி வெளியான தகவல்!

Latest Videos

click me!