மாடலாகவும், தொகுப்பாளராகவும் பிரபலமான காயத்ரி பல வருடங்களாக திரைப்படங்களில் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய நிலையில், இவரின் நிறம் மற்றும் உடலமைப்பு போன்ற சில காரணங்களால் பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. பின்னர் சீரியலில் நடிக்க முடிவு செய்தார். தெரிந்த ஒருவர் மூலம் எதிர்நீச்சல் தொடர் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே, ஆடிஷனில் இயக்குனரையே ஆச்சர்யப்படுத்தினார். 'எதிர்நீச்சல்' சீரியலுக்கு பின்னர், அடுத்தடுத்து திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வரும் காயத்ரி விரைவில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் 'கிழக்கு வாசல்' தொடரில் கதாநாயகனாக நடிக்கும் வெங்கட் ரங்கநாதனுக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.