எதிர்நீச்சலை தட்டிதூக்க வருகிறது புது சீரியல்... அதுவும் 90ஸ் கிட்ஸோட பேவரைட் சீரியலின் இரண்டாம் பாகம்!

First Published | Aug 1, 2023, 11:29 AM IST

எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அதற்கு போட்டியாக புது சீரியல் ஒன்று விரைவில் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ethirneechal

சினிமா தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி அடைந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றாலும், இன்னும் தொலைக்காட்சி சீரியலுக்கான மவுசு என்பது குறைந்தபாடில்லை. சொல்லப்போனால், முன்பைவிட தற்போது தான் சீரியல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தான் வாரத்தில் 5 நாட்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்கள் பின்னர் ஆறு நாட்களாக அதிகரிக்கப்பட்டு தற்போது வாரத்தின் 7 நாளும் ஒளிபரப்பப்படும் நிலைக்கு வந்துள்ளது.

ethirneechal

வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பப்பட்ட முதல் சீரியல் என்கிற பெருமையை பெற்ற தொடர் எதிர்நீச்சல் தான். கோலங்கள் என்கிற சூப்பர்ஹிட் தொடருக்கு பின்னர் இயக்குனர் திருச்செல்வம் சன் டிவியில் இயக்கி வரும் தொடர் தான் எதிர்நீச்சல். பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத தொடராக உள்ளதால், இதற்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது டிஆர்பி-யிலும் எதிர்நீச்சல் தொடர் சக்கைப்போடு போட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... என்ன மாதிரியே நடிப்பியாடா நீ... பிரபல காமெடி நடிகரை ஆள் வச்சு அடிச்சு அவமானப்படுத்திய வடிவேலு!


Metti oli

இந்நிலையில், எதிர்நீச்சல் தொடருக்கு போட்டியாக விரைவில் சன் டிவியில் புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் 90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியலாக விளங்கிய மெட்டி ஒலி தொடரின் இரண்டாம் பாகம் தான் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரியலை திருமுருகன் இயக்க உள்ளதோடு அதனை தனது திரு பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thirumurugan

மெட்டி ஒலி 2 தொடர் வந்தால் அது நிச்சயம் எதிர்நீச்சலுக்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் திருமுருகன் கடைசியாக நாதஸ்வரம் என்கிற தொடரை இயக்கி இருந்தார். அந்த தொடரும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடியது. இவர் தமிழில் ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளார். அந்த படம் தான் எம்.மகன். பரத், வடிவேலு, சரண்யா பொன்வண்ணன், நாசர் நடித்த இப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... முதியவரை நிர்வாணமாக படமெடுத்து ரூ.11 லட்சம் அபேஸ் பண்ணிய நடிகை! சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

Latest Videos

click me!