Baakiyalakshmi Serial: மகள் இனியாவுக்கு போட்டியாக பாக்கியா எடுத்த முடிவு? செம்ம ஷாக்கில் கோபி..!

First Published | Jul 31, 2023, 7:15 PM IST

பாக்கியலட்சுமி தொடரில், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக... மகள் இனியாவுக்கு போட்டியாக கல்லூரியில் சேர்ந்து படிக்க துவங்கியுள்ளார் பாக்கியா.
 

கணவனே கண் கண்ட தெய்வம்... குடும்பமே உலகம் என வாழ்ந்து வந்த பாக்கியா... கோபியுடனான விவாகரத்துக்கு பின்னர், தன்னுடைய திறமையை வளர்த்து கொள்ள, வயது ஒரு பெரிய தடையே இல்லை என புரிந்து கொண்டு, தன்னுடைய சமையல் திறமையை வெளிக்காட்டி தற்போது ஒரு தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.

ஈஸ்வரி என்கிற மசாலா கம்பெனி மூலம், பாக்கியா தன்னுடைய தொழிலுக்கு பிள்ளையார் சுழி போட்டார். அடுத்தடுத்து, சமையல் ஆர்டர்கள், மற்றும் கேன்டியன் ஒன்றையும் நிர்வகிக்கும் அளவுக்கு உயர்ந்து விட்ட நிலையில்,  கோபிக்கு ஷாக் கொடுக்கும் விதமாக... சமீபத்தில், இனியாவை கல்லூரியில் சேர்க்க சென்ற போது ஆங்கிலத்தில் பிச்சு உதறினார். இதனால் ஒரு நிமிடம் கோபி இது கனவா? என்று கூட மலைத்து போனார்.

தாய் - தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள்! இளைஞர்களுக்கு நடிகர் ராதாரவி வேண்டுகோள்!

Tap to resize

இதை தொடர்ந்து, சுயதொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்குவது குறித்து, தெரிந்த ஒருவர் மூலம் தகவல் கிடைக்க பாக்கியா பேங்குக்கு சென்ற போது, எல்லா ஆவணங்களும் இருந்தாலும், அவரின் கல்லூரி டிகிரி சர்டிபிகேட் இல்லாதது கடன் கிடைப்பதற்கு தடையாக இருக்கிறது. பேங்க் மேனேஜர், படித்த பெண்களுக்கு வழங்கும் இந்த கடனுக்கு டிகிரி சர்டிபிகேட் அவசியம் என கூறுகிறார்.

இதை தொடர்ந்து, டிகிரி படிக்கும் எண்ணத்தில் பாக்கியா இருந்தாலும் இது எந்த அளவுக்கு ஒர்க்கவுட் ஆகும் என்பது, பாக்கியா மனதில் ஒரு அச்சம் ஏற்பட்ட நிலையில், மகனின் துணையோடு கல்லூரியில் சேர்கிறார். இதை அறிந்து, ஒரு பக்கம் அம்மா தனக்கு போட்டியாக படிக்க வருகிறாரே என இனியா ஷாக் ஆகி, இதனை கோபியிடம் கூறுகிறார். அவரும் அதிர்ச்சியுடன் இந்த காலத்தில் கல்லூரியில் படிக்க உங்க அம்மாவுக்கெல்லாம் யார் சீட் கொடுக்குறாங்க என கேட்கிறார். அதற்க்கு இனியா நான் சேர்ந்துள்ள கல்லூரியில் தான் படிக்க போறாங்க என கூறுகிறார். பாக்கியாவின் இந்த அசுர வளர்ச்சியை கண்டிப்பாக கோபி எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனினும் அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கைவசம் இத்தனை படங்களா? நிற்க கூட நேரம் இல்லை.! பம்பரமாக சுழன்று நடித்துக்கொண்டிருக்கும் கார்த்தி!

Latest Videos

click me!