குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா டைட்டில் வின்னர் ஆனார். இதையடுத்து இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் டைட்டிலை தட்டிச் சென்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் மைம் கோபி, சிவாங்கி, விசித்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, கிரண், ஆண்ட்ரியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இந்த ஆறு போட்டியாளர்களுக்கு இடையே தான் இறுதிப்போட்டி நடைபெற்றது.