எதிர்நீச்சல் தொடரில் நடித்து பிரபலமான மாரிமுத்து அண்மையில் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் ஜோதிடர்களை சரமாரியாக விமர்சித்து பேசி இருந்தார். அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி, விவாத பொருளாகவும் மாறியது. இந்நிலையில், தற்போது அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வரும் பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க மாவட்ட ஓருங்கினைப்பாளர் பழ.ஆறுமுகம் என்பவர் தான் இந்த வக்கீல் நோட்டீஸை அனுப்பி இருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : “கடந்த 23.07.2023 தேதி அன்று பிரபல ஜி தமிழ் தொலைக்காட்சியில் பகல் 12 மணியளவில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடம் பற்றிய கருத்து நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் உள்ள ஜோதிடர்கள், நடிகர் மாரிமுத்து, நடிகைகள் அர்ச்சனா மற்றும் நளினி மற்றும் ஜோதிடம் எதிர் கருத்து உடையவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கொண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது.