தமிழக மக்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் 5 முக்கிய சீரியல்கள் பற்றி வெளியான தகவல்!

First Published | Jul 28, 2023, 6:36 PM IST

தினம் தோறும், இல்லத்தரசிகளை கவரும் விதத்தில், ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகி வரும், சீரியல்களில்... தமிழக ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வரும் 5 சீரியல்கள் குறித்த தகவல் TRP தரவரிசை அடிப்படையில் வெளியாகியுள்ளது.
 

கயல்:

கயல் சீரியல் தான் அர்பன் மற்றும் ரூரல் ஏரியாக்களில் அதிகம் பார்க்கப்படும் தொடராக உள்ளது. 11.71 புள்ளிகளுடன் TRP-யில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள இந்த தொடரில் தற்போது கயல், எழிலின் காதலை ஏற்றுக்கொண்டு... அவரை திருமணம் செய்து கொள்வாரா? என ரசிகர்கள் மிகவும்  ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். காதல், பாசம், குடும்ப செண்டிமெண்ட், பகை, பழிவாங்கும் முயற்சி என... அனைத்தும் கலந்த கலவையாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், மீனா குமாரி, அபினவ்யா, அவினாஷ் அசோக், முத்துராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

எதிர்நீச்சல்:

எதிர்நீச்சல் சீரியல், 11.24 TRP புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. ஆதிரையின் திருமண எபிசோடு இதுவரை எந்த சீரியலும் பெற்றிராத அதிக TRP-யை கைப்பற்றி சாதனை செய்த நிலையில், தற்போது ஆதி குணசேகரன்... அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்களை இழந்து விட்டதால் அதை எப்படி மீட்டெடுப்பார் என்கிற எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மதுமிதா, மாரி முத்து, ஹரி ப்ரியா, கனிகா, கமலேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

சன் டிவி விளம்பரங்களில் பேசும் கணீர் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

Tap to resize

வானதைப்போல:

அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும், இந்த தொடர் சின்னத்திரை 'பாசமலர்' என கூறலாம். இந்த தொடர் 10.13 TRP புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த தொடரில் ஸ்ரீ குமார், மான்யா ஆனந்த், சங்கீதா, மகாநதி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

இனியா:

நான்காவது இடத்தில், 9.68 TRP புள்ளிகளுடன் இனியா தொடர் உள்ளது. இந்த தொடர் துவங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கிட்ட தட்ட இந்த தொடரும் ஆணாதிக்கத்தை மைய படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ராஜா ராணி தொடர் நாயகி ஆல்யா மானசா, ரிஷி ஆகியோர் நாயகன் - நாயகியாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புருஷனுக்காக ஈஸ்வரி எடுக்கும் முடிவு.. அதிர்ச்சியில் ஜனனி! குலுங்கி அழும் குணசேகரன்.. 'எதிர்நீச்சல்' எபிசோட்!

மிஸ்டர் மனைவி:

ஐந்தாவது இடத்தில்... 9.45 TRP புள்ளிகளுடன் மிஸ்டர் மனைவி தொடர் உள்ளது. இதில் செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த தொடரும் குறுகிய நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடராக மாறியுள்ளது. அதே சமயம்... ஒவ்வொரு முறையும் டாப் 5 லிஸ்டில் இடம்பெறும் சுந்தரி தொடர் இந்த லிஸ்டில் இடைபிடிக்கவில்லை.

Latest Videos

click me!