மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்? கண்ணாடி பொட்டிக்கு சொல்லிடவா என கேட்ட கரிகாலன்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!

First Published | Jul 27, 2023, 6:06 PM IST

'எதிர்நீச்சல்' சீரியல் சற்றும் சுவாரசியம் குறையாமல், ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய அப்டேட் வெளியாகி, சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
 

அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்களை ஜீவானந்தம் கைப்பற்றிய நிலையில், அகம்பாவத்தில் ஆட்டம் போட்ட குணசேகரன் தற்போது அடங்கி போய் இருந்தாலும், எப்படியம் பறிபோன சொத்துக்களை தன் வீட்டு பெண்களை வைத்தே திரும்பவும் அடைய வேண்டும் என திட்டம் போட்டு வருகிறார். 

மேலும் நேற்றைய தினம் ஆடிட்டரிடம், தற்போது வாழ்ந்து வரும் வீடு, அப்பத்தாவின் 40 சதவீத பங்கில் வருகிறதா? இல்லை குணசேகரனின் 60 சதவீத பங்கில் வருகிறதா என கேட்டபோது... அப்பத்தாவின் பங்கில் தான் வருகிறது என கூறியதும், நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்த குணசேகரனை, கதிரும்... கரிகாலனும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வெகேஷனில் சமந்தாவுக்கு கிடைத்த புது தோழன்..! ரொம்ப குடுத்துவச்சவர்... பொறாமையில் பொங்கிய நெட்டிசன்ஸ்!

Tap to resize

ஒருபுறம் குணசேகரனுக்கு தீவிரமாக சிகிச்சை போய் கொண்டிருக்க... உண்மையிலேயே குணசேகரனுக்கு உடல் நிலை சரி இல்லையா? அல்லது இதுவும் இவரின் திட்டமா என சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இந்நிலையில், ஈஸ்வரி, ரேணுகா, ஜனனி, நந்தினி ஆகியோர்... அப்பத்தாவின் 40 சதவீத பங்கை ஜீவனந்தத்திடம் இருந்து, திரும்ப பெரும் விஷயத்தில்... குணசேகரனுக்கு ஆதரவாக உள்ளனர்.

மேலும் இன்றைய புரோமோவில், ரேணுகா... இனி நாம போய் உருண்டு பிரண்டு ஜீவானந்தம் கிட்ட சொத்தை வாங்கிட்டு வந்தா தான், இவரு எந்திரிச்சு வருவாரு போல, என்று சொல்ல.. அதற்கு ஜனனி "ஆமாக்கா அதைத்தான் செய்யணும்" என்கிறார். உடனே ஈஸ்வரியும் வா ஜனனி போகலாம் என்று கூறுவது யாருமே எதிர்பாராத ஒன்று என கூறலாம். 

காவாலா பாடலின் ஹிந்தி வெர்ஷன் 'து ஆ தில்பாரா' பாடல் வெளியிட்டு விழாவில் குத்தாட்டம் போட்ட தமன்னா! வீடியோ

இதை தொடர்ந்து கரிகாலன் கதிரிடம், மாமா... நான் வேணும்னா ஐஸ் பெட்டிக்கு சொல்லிறவா.. என கேட்க இதை கேட்டு கடுப்பான கதிர் எட்டி மிதிச்சுருவேன் என்று கத்துகிறார். உடனே கரிகாலன், நீ போட்ட சத்தத்திலேயே பாதி பேஷண்ட் செத்து - போய்டுவாங்க போல என சொல்கிறார். பின்னர் மருத்துவர் வந்து குணசேகரனின் உடல்நிலை குறித்து ஏதோ கூற ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியடைகிறது. எனவே இன்றைய எபிசோடில் எதிர்பாராத பல சம்பவங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!