ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள இந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள இந்நிகழ்ச்சியில் சிவாங்கி, விசித்ரா, கிரண், மைம் கோபி, ஆண்ட்ரியன், ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இதில் ஆண்ட்ரியன் மட்டும் வைல்டு கார்டு சுற்று மூலம் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதால், அந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்த விவரமும் ஏற்கனவே லீக் ஆகிவிட்டது. அதன்படி மைம் கோபி தான் இந்த சீசனின் வெற்றியாளர் என தெரியவந்துள்ளார். இதன்மூலம் குக் வித் கோமாளி வரலாற்றில் முதன்முறையாக டைட்டிலை வென்ற ஆண் போட்டியாளர் என்கிற சாதனையையும் இதன் மூலம் நிகழ்த்தி உள்ளார் மைம் கோபி.
இந்த சீசனில் மிகவும் டஃப் கொடுத்த போட்டியாளரான ஷெரினுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ. 35 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் ராஜ் அய்யப்பாவுக்கு ரூ. 26 ஆயிரமும், நடிகை விசித்ராவுக்கு ரூ. 30 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இறுதியாக பைனலுக்குள் நுழைந்த போட்டியாளரான ஆண்ட்ரியனுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.30 ஆயிரமும், இந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே எலிமினேட் ஆன விஜே விஷாலுக்கு ரூ.25 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் பைனலிஸ்ட் ஆன சிருஷ்டி டாங்கேவுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளதாம்.