'குக் வித் கோமாளி' சீசன் 4 வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளதா? வெளியான தகவல்!

First Published | Jul 25, 2023, 2:59 PM IST

'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியதை தொடர்ந்து, கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் பினாலேவுக்கான சூட்டிங் நடந்து முடிந்தது. இதில் வெற்றி பெற்ற போட்டியாளருக்கு, எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக அதிகமான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் பிரபலங்களுக்கு முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை..  விட சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும், இதில் கலந்து கொள்ள பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் 'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டது. இதில் புதிய கோமாளிகளாக மோனிஷா, ஜிபி முத்து, போன்ற சிலர் கலந்து கொண்ட நிலையில், போட்டியாளர்களாக சிருஷ்டி டாங்கே, ராஜ் ஐயப்பா, விசித்ரா, ஆண்ட்ரியன், ஷெரின், காளையன், மைம் கோபி, விஜே விஷால், கிஷோர், சிவாங்கி உள்ளிட்ட 10 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கண்கலங்கி அழுத பிக்பாஸ் ரக்ஷிதா.. மௌனம் வெளிப்படுத்திய ஆயிரம் வலிகள்! பதறியபடி ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
 

Tap to resize

அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு, தங்களுடைய சமையல் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினர். குறிப்பாக குக் வித் கோமாளி மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்து...  நான்காவது சீசனில் குக்காக அவதாரம் எடுத்த, சிவாங்கியின் சமையல் திறமை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்பட்டது. நடுவர்களே ஆச்சர்யப்படும் வகையில் சமையலில் பின்னி பெடல் எடுத்தார். மேலும் சிவாங்கி விஜய் டிவிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், இவரே இந்த முறை டைட்டில் பட்டதை கைப்பற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதுக்கு ஏற்ற போல் இவரும் குக் வித் கோமாளி பினாலே லிஸ்டில் இடம்பெற்றிருந்தார். 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த பினாலே போட்டியில், விசித்ரா, மைன் கோபி, ஆண்ட்ரியன், சிருஷ்டி டாங்கே, கிரண், சிவாங்கி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பிரபல நடிகர் மைம் கோபி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.  மேலும் இரண்டாவது பரிசை சிருஷ்டி டாங்கேவும், மூன்றாவது பரிசை விசித்திராவும் கைப்பற்றினர் என தகவல் வெளியானது. அதே போல் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவாங்கி முதல் மூன்று இடங்களை பிடிக்காதது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும், விஜய் டிவி திறமையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கியதில் மகிழ்ச்சி என பல ரசிகர்கள் டைட்டில் வின்னரான மைம் கோபிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட யோகி பாபுவின் இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
 

தற்போது 'குக் வித் கோமாளி' சீசன் 4 பினாலே நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு எவ்வளவு பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டைட்டில் வின்னரான மைம் கோபிக்கு 10 லட்ச ரூபாய் ரொக்க தொகை பரிசாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது பரிசை கைப்பற்றிய சிருஷ்டி டாங்கேவுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது. மேலும் இவர்களுடைய கோமாளிக்கு தலா ஆளுக்கு ஒரு லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!